மகாபாரதம்
![]() |
| மகாபாரதம்-mahabharatham |
மகாபாரதம்
தருமர்ரிஷிகளுக்கு விருந்தளித்துத் திருப்தியடையச் செய்தார். கிருஷ்ணருக்காக பல தானங்களைச் செய்தார். பரீட்சித்துவைக் கிருபரின் சீடனாக ஆக்கினார். தன் அமைச்சர்களைக் கூட்டித்தான் மகாபிரஸ்தானம் போகப் போவதாக அவர் அறிவித்தார். அவர்கள் அவரிடம் அவ்வாறு போக வேண்டாம் என்று வேண்டிய போதிலும் தருமர் அவர்களுக்குத் தக்க சமாதானம் கூறி தாம் போவதற்கு அவர்களை இணங்க வைத்தார்.
இதற்குப் பின் பாண்டவர்களும், துரௌபதியும் தம் பட்டாடை களையும், ஆபரணங்களையும் களைந்து விட்டு மரவுரி அணிந்து கொண்டார்கள். அவர்கள் தம் அரண் மனையிலிருந்து வெளியே வந்து நகரை விட்டு செல்லலானார்கள். அவர்கள் நகருக்கு வெளியே வந்து தம் பயணத்தைத் துவக்கிய போது அவர்களை ஒரு நாய் பின்தொடர்ந்து சென்றது.
தருமர் அந்த நாயையும் அழைத்துக் கொண்டு மற்ற அறுவருடன் தம் மகாப்பிரஸ்தான யாத்திரையைத் தொடர்ந்தார். அவர்களுடன் நகர வாசிகளில் சிலர் கொஞ்சதூரம் போய் வழியனுப்பி விட்டு நகருக்கு திரும்பி வந்தனர். பாண்டவர்கள் துரௌபதியுடன் சென்ற பின் உலூபியும் சித்திராங்கதையும் அங்கிருக்கவில்லை. உலூபி கங்கை நதிக்குள் பிரவே சித்தாள். சித்திராங்கதை மணிப் புரத்திற்குச் சென்றாள். பாண்டவர் களின் மற்ற மனைவிகள் பரீட்சித் துடன் இருந்து விட்டனர்.
பாண்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்து கிழக்கு திக்கில் சென்றனர். அவர்கள் பல நதிகளையும் மலைகளையும் நாடுகளையும் கடந்து லௌஹித்தியம் என்ற கடலை அடைந்தார்கள். மகாப்பிரஸ்தானத்தில் மற்றவர்களுடன் சென்று கொண்டிருந்த அர்ஜுனன் தன் காண்டீபத்தையும் அக்ஷய அம்புராத்தூணியையும் தன்னுடன் எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது பாண்டவர்களின் முன் அக்கினி தேவன் தோன்றி "நீங்கள் மகாப்பிரஸ்தானம் செல் கையில் அர்ஜுனனுக்கு காண்டீபம்எதற்கு? இது வருண தேவனுடையது. இதை அர்ஜுனன் அவனிடம்கொடுத்து விட வேண்டும்" என்றான். அர்ஜுனனும் உடனே காண்டீபத் தையும் அக்ஷய அப்புராத்தூணி யையும் கடலில் போட்டு விட்டான்.
அதன் பின் பாண்டவர்கள் தென் திசையில் சென்று வடமேற்கில் நடந்து மேற்காகத் திரும்பினார்கள். கடலில் மூழ்கிப் போன துவாரகையை அவர்கள் கண்டார்கள். அங்கிருந்து அவர்கள் வட திசையில் சென்றார்கள். இமய மலையைக் கடந்து அவர்கள் செல்கையில் முதலில் துரௌபதி இறந்து விழுந்தாள்.
தருமர் அதை அறிந்தும் திரும்பி பாராமலே நடக்கலானார். அதன் பின் வரிசையாக சகாதேவன், நகுலன், அர்ஜுனன் ஆகியோர் இறந்து விழுந்தார்கள்.அப்போதும் தருமர் திரும்பிப் பார்க்கவில்லை.
இதற்குப் பின் பீமனும் விழுந்து இறந்தான். அப்போதும் தருமர் திரும்பிப் பாராமல் சென்று கொண்டே இருந்தார். அவர் பின்னால் நாய் மட்டும் போய்க் கொண்டே இருந்தது. சற்று நேரமானதும் இந்திரன் தன் ரதத்துடன் வந்து தருமர் முன்நின்று “நீங்கள்இதில் ஏறிக் கொள்ளுங்கள். சொர்க்கத்திற்குப் போகலாம்" என்றான்.
தருமரோ 'என்தம்பிகளும் துரௌபதியும் என் கூட இல்லாத போது எனக்கு சொர்க்கம் எதற்கு ? அவர்களும் அங்கிருந்தாலே நானும் அங்கே இருப்பேன்" என்றார். இந்திரனும் "இறந்த பின் அவர்களும் சொர்க்கத்தை வந்தடைந்து விட்டார்கள். உங்களுக்கு பூத உடலுடன் சொர்க்கத்தை அடையும் பாக்கியம் கிட்டியுள்ளது" என்றான்.
தருமர் அதற்கு இணங்கவில்லை. நாய்க்கு சொர்க்கத்தில் இடம் தர முடியாது என்று எவ்வளவோ சொல்லியும் தருமர் அதை ஏற்கவில்லை. அப்போது நாயாக வந்த எமதர்மன் தருமரின் முன் வந்து "வன வாசத்தின் போது யட்சனாக வந்து உன்னை ஒரு முறை பரீட்சித்தேன். இப்போது நாயாக வந்து பரீட்சித்தேன். உனக்கு இணையானவர் எங்குமே இல்லை. நீ இந்த உடலுடன் உத்தம லோகங்களுக்குச் செல்லலாம்" என்றான்.
தேவர்களெல்லோரும் தருமரை ரதத்தில் அமர்த்தினர். அவரது ரதம் முன் செல்ல அதன் பின்னால் அவர்கள் தம் ரதங்களில் அமர்ந்து சென்றனர். அப்போது இந்திரன் 'சொர்க்கத்தை அடையும் நீங்கள் ஏன் இன்னமும் மானிட சம்பந்தத்தை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?" என்று கேட்டான்.
தருமரோ "என் தம்பிகளையும் துரௌபதியையும் விட்டுப் பிரிந்திருக்க என் மனம் ஒப்பவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? நானும் அங்கேயே இருக்கிறேன்” என்றார். சொர்க்கத்திற்குச் சென்ற தருமர் அங்கு தேவர்களிடையே உயர்ந்த ஆசனத்தில் துரியோதனன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அதனால் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு
"பேராசை பிடித்த இந்த துரியோதனன் இருக்கும் இந்த சொர்க்கத்தில் நான் இருக்க விரும்பவில்லை" என்றார். அதைக் கேட்ட நாரதர் சிரித்து ''தருமா! சொர்க்கத்தில் பழைய பகைமையை மறந்து விட வேண்டும். அந்த துரியோதனன் வீர மரணம் அடைந்து சொர்க்கத்திற்கு வந்திருக்கிறான்" என்றார்.
அப்போது சில குரல்கள் கெஞ்சுவது போல "நீங்கள் வந்தது எங்களுக்குச் சுகமாக உள்ளது. இன்னும் கொஞ்ச நேரம் இருங்கள்” என்றன. அது கேட்டு தருமர் "நீங்களெல்லாம் யார்? ஏன் இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட் டார். அப்போது 'நான்தான் கர்ணன்', 'நான் தான் பீமன்', 'நான் தான் அர்ஜுனன்', 'நான் நகுலன், 'நான் சகாதேவன்', நான்துரௌபதி” என்று அக்குரல்கள் கூறின.
அதைக் கேட்டு தருமர்தம் மனதுள் "இவர்கள் என்ன பாவங்களைச் செய்து இங்கே இருக்கிறார்கள்? எந்த புண்ணியச் செயல் புரிந்து துரியோதனன் சொர்க்கத்தை அடைந்தான்? ஒரே குழப்பமாக இருக்கிறதே. நான் கேட்டதும் கண்டதும் யாவும் உண்மைதானா?" என எண்ணம் இட்டார்.
பிறகு அவர் விரக்தியுடன் “நீ வந்த வழியே போய் விடு. நான் அங்கே வர மாட்டேனென்று அவர்களிடம் கூறி விடு. நான் என் சகோதரர்களை இங்கே இப்படியே விட்டு விட்டு வர மாட்டேன். நான் வந்ததால் இவர்கள் சுகமடைந்ததால் இனி நான் இவர்களுடனேயே இருப்பேன்" என்றார். அந்த தேவனும் அங்கிருந்து போய் தேவேந்திரனிடம் நடந்ததை எல்லாம் சொன்னான்.
தருமர் இரண்டு நாழிகை நேரம் அங்கே இருந்தார். இதற்குப் பின் தேவேந்திரன் மற்ற தேவர்களுடன் அங்கு வந்தான். அவர்கள் வந்ததும் அங்கு சூழ்ந்திருந்த இருள் விலகியது. பாவிகளின் கூச்சல்கள் அடங்கின. நீராவியை வெளியேற்றிக் கொண்டிருந்த வைதரணி நதி மறைந்தது. மெல்லிய காற்று வீசி நறுமணத்தைப் பரப்பியது.
தேவேந்திரனும் "தருமரே! உங்கள் செயலில் தேவர்கள் யாவரும் பாராட்டுகிறார்கள். நீங்கள் இங்கே இருந்தது போதும். எங்களுடன் வாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்கும் உயர்ந்த சொர்க்கம் கிடைக்கும். நீங்கள் சற்றும் மனம் உடைந்து போக வேண்டாம். ஒவ்வொருவனும் தான் செய்த புண்ணிய பாவச் செயல்களின் பலனை அனு பவித்தேயாக வேண்டும். முதலில் புண்ணியச் செயல்களின் பலன்களை அனுபவித்து விட்டால் பிறகு பாவச் செயல்களின் பலன்களை அனுபவிக்கவும் வேண்டும்.
முதலில் பாவச் செயல்களின் பலன்களை அனுபவித்து விட்டால் பிறகுபுண்ணியச் செயல்களின் பலன்களை அனு பவிக்கலாம். புண்ணியச் செயல்களின் பயன்களை அனுபவித்தால் பிறகு பாவச் செயல்களின் பலன்களை ஒருவர் அனுபவிக்கலாம். குறைந்த பாவத்தைச் செய்தவன் முதலில் நரகலோகத்தை அடைகிறான். அதற்காகத்தான் முதலில் உங்களை நரக வேதனை அனுபவிக்க அனுப்பினேன்.
உங்கள் சகோதரர்களும் துரௌபதியும் அவர்கள் செய்த பாவங்களுக்காக முதலில் நரகலோகம் சென்றார்கள். இப்போது அவர்களுடைய பாவங்கள் போய் விட்டதால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்கள். நீங்களே வந்து பாருங்கள். நீங்கள் மிக அதிக புண்ணியச் செயல்கள் புரிந்து அவற்றின் பலனைப் பெற்றீர்கள். உங்களுக்கு சொர்க்கத்தில் மிக உயரிய இடமே இருக்கிறது" எனச் கூறினான்.
அம்புலிமாமா






கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."