பாரதப் பண்பாடு- வரலாறு
![]() |
பாரதப் பண்பாடு- வரலாறு-bharata-panpadu-varalaru |
பாரதப் பண்பாடு- வரலாறு
ஒரு உயரிய நாகரீகத்தின் நிகழ்ச்சிகள். பரம்பரை பரம்பரையாக உண்மையைக் காண ஆய்வு
18. கல் சொல்லும் கதைகள்
அன்று சோமநாதர் பூங்காவிற்குச் செல்லவில்லை. ஆனால் சேகரும் சியாமளாவும் விட்டு விடுவார்களா? இரவில் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு முடிந்ததும் சேகர் "தாத்தா! இன்றைக்கு என்ன கதை சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கின்றன" என்றான்.
சோமநாதரும் இவை பழங்காலத்துக் கதைகள் என்றாலும் வரலாற்று உண்மைகள் இவற்றில் பதிந்துள்ளன. நீண்ட காலமாகப் பலர் வாயிலாக இக்கதைகள் கேட்டுக் கேட்டு வந்திருப்பதால் சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டும் இருக்கலாம்: ஆயினும் அவற்றில் வரலாற்று உண்மைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது'' என்றார்.
அப்போது சேகரின் தாயாரும் "ஆமாம் எனக்குக் கூட அவ்வப் போது புரி ஜகன்நாதர் கோவில், கன்னியாகுமரிக் கோவில், மதுரைக் கோவில் ஆகியவை பற்றிக் கூறப்படும் பழங்கதைகளில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதனால் அவற்றில் எது உண்மை. எது கற்பனை என்று தெரியாமல் விழிக்கிறேன்'' என்றாள்.
சோமநாதரும் “இந்தப் பழங்கால கதைகள் எல்லாம் ஒருவர் சொன்னதைக் கேட்டு கொண்டு மற்றவர் வேறொருவருக்குச் சொல்லி வந்தவை. அதனால் இடையிடையே மாற்றங்கள் செய்யப்படுவது இயல்பே. அதனால் தான் சில விஷயங்கள் நம்ப முடியாமல் இருக்கின்றன" என்றார்.
அப்போது சேகர் "தாத்தா! வரலாற்று உண்மையும் மிகைப்படுத் தப்பட்ட சம்பவங்களும் கொண்ட ஏதாவது ஒர் உதாரணத்தைக் கூறுகிறீர்களா?” என்று கேட்டான். சோமநாதரும் 'ஆகா! சொல்கிறேன். வாரணாசி எனப்படும் காசியின் கதை தான் அது" என்று கூறிச் சொல்லத் தொடங்கினார்.
காசி என்ற வாரணாசி நகரம் உலகிலேயே மிகப் பழமையான நகரம் என்று கூறலாம். இங்கு தான் புகழ்பெற்ற விசுவநாதர் ஆலயம் உள்ளது. இது சிவன் கோவில். இந்த நகரின் மன்னன் திவோதாசன். ஏதோ ஒரு காரணமாக சிவபிரான் அவன் மீது கோபம் கொண்டு அந்த நகரத்தை விட்டு வெளியேறினார். தான் அந்த நகரை விட்டுப் போய் விட்டால் மன்னன் படாத கஷ்டங்கள் படுவானென சிவ பிரான் எண்ணிவிட்டார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மக்கள் எப்போதும் போல எவ்விதக் குறையும் இன்றி இருந்தார்கள். ஏனெனில் மன்னன் அவர்களது குறைகளைப் போக்கி அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. சிவபெருமான் இல்லாத குறை மன்னனையும், மக்களையும், வெகு வாக உணர வைத்தது. என்ன தான் இகலோக சுகங்கள் கிடைத்தாலும், பரலோகத்திற்குச் செல்ல பகவானிடம் பக்தி கொள்வது தானே வழி! இதை எண்ணி, எண்ணி மன்னனும், மக்களும் மனம் உருகி சிவபிரானைத் துதிக்கலானார்கள். சிவபிரானும் கருணை கொண்டு காசி நகருக்குத் திரும்பி வந்தார்.'
இவ்வாறு கூறி சோமநாதர் நிறுத்தியதும் சேகர் “இதில் ஏதாவது மறைந்திருக்கிறதா?" என்று கேட்டான். அவரும் "ஆமாம். ஒரு விஷயம் உள்ளது. காசியில் கொஞ்ச காலத்திற்கு புத்தமதம் தலை தூக்கி நின்றது. அதனால் வழக்கமாக சிவபிரானுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் குறையலாயின. புத்தமதம் வாழ்க்கை முடிந்ததும் இறைவனடியை ஒருவன் சேருவான் என்பதை நம்பாதது. அதனால் அந்நகரமக்களுக்கு அம்மதத்தின் மீது வைத்த நம்பிக்கை போய் விட்டது. யாவரும் மீண்டும் ஹிந்து மதத்தையே நம்ப லானார்கள். இதைக் குறிப்பது தான் சிவபெருமான் காசிக்குத் திரும்பி வந்த சம்பவம்" என்றார்.
அப்போது சேகர் "ஓ! இதுவா விஷயம்! நாம் பழங்காலக் கதைகள் என்று கூறி எந்தக் கதையையும் ஒதுக்கி விடக் கூடாது. அவற்றோடு வரலாற்று நிகழ்ச்சி களையும் இணைத்துப் பார்க்க வேண்டும்" என்றான். சோமநாதரும் 'ஆம். பழங் காலக் கதைகளை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவற்றில் வரலாற்று சம்பவங்களை இணைத்துப் பார்க்க முடியும். அது மட்டுமல்ல, மக்களின் அக்காலத்திய சமுதாய வாழ்க்கை, மனநிலை முதலியவற்றையும் அவற்றில் காணலாம்.
புரி ஜகன்நாதரின் கதை நினைவிருக்கிறதா? அதில் ஒரு அந்தணன் ஒரு மலைச்சாதிப் பெண்ணை மணந்தான் என்றும் அவர்களது சந்ததியினரே அக்கோவிலின் அர்ச்சகர்களாகத் தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டு மக்கள் மலைச் சாதியினரைத் தாழ்ந்தவர்கள் என்று பாகுபடுத்தாமல் நடந்து கொண்டனர். ஆனால் இன்றோ நிலைமை அப்படி இல்லையே" என்று கூறிப்பெரு மூச்சு விட்டார்.
இதன் பிறகு அவர் "மதுரை மீனாட்சி அம்மனைப் பற்றிக் கூறு கிறேன். அவள் மதுரையின் அரச குமாரி. அவளை மணக்க சுற்றிலு மிருந்த நாடுகளின் அரசகுமாரர்கள் போட்டி போட்டனர். ஆனால் அவள் அவர்களில் யாரையுமே மணக்க முடியாது எனக் கூறி விடவே அவர்கள் ஒன்று சேர்ந்து மதுரையின் மீது படை எடுத்தனர். ஆனால் மீனாட்சி அவர் களைத் தோற்கடித்து அழித்தாள். அந்த மாதிரிப் பழங்காலக் கதைகள் எவ்வளவோகதைகள் உள்ளன” என்றார்.
சியாமளாவும் சேகரும் ''பல கதைகளா? இன்னும் ஒரு கதை சொல் லுங்கள்” எனவே அவர் மேலும் ஒரு கதையைக் கூறினார். “உங்களுக்கு ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள கோனார்க் சூரிய தேவர் ஆலயம் பற்றித் தெரிந்திருக்குமே. கலிங்க மன்னர் நரசிம்மதேவர் கோனார்க்கில் சூரிய தேவரின் ஆலயத்தை நிர்மாணிக்க பனி ரெண்டாயிரம் சிற்பிகளையும் பொறியாளர்களையும், தொழி லாளிகளையும் நியமித்தார்.அவர்கள் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து அடுக்கடுக்காக ஆலயத்தைக் கட்டி னார்கள். இருநூறடி உயரக் கற்கள் மிக உயரத்தில் ஏற்றப்பட்டது அதிசயத்திலும் அதிசயமே.
ஆலய நிர்மாணம் முடிவடையும் நிலையை அடைந்து விட்டது. மேலே சிறப்பாக வடிவாக்கப்பட்ட கோபுர கும்பத்தை ஏற்ற வேண்டியது தான் மிஞ்சி இருந்த வேலை. அந்த கும்பத்தை ஏற்றும் வழி அவர்களுக்குத் தெரியவில்லை. மன்னனோ ஆலய நிர்மாணத்தை விரைவில் முடிக்கத்துடியாய்த்துடித்தான்.
அந்த சிற்பி விஷ்ணு மகாரானா என்ன செய்வதென்று திகைத்தான். அப்போது ஒரு இளைஞன் அவன் அருகே வந்தான். அவன் வேறு யாருமல்ல, விஷ்ணுவின் மகனே. அவன் பெயர் தர்மபாதன். சிறு குழந்தையாக அவன் இருக்கையில் விஷ்ணு அவனை விட்டுப் பிரிந்து வந்து விட்டான். தர்மபாதன் தன் தந்தையின் புகழ் கேட்டு தேடி வந்து அவனைக் கண்டான்.
அப்போது தந்தையின் முன்னுள்ள பிரச்சினை என்ன என்று தெரிந்தது. அவன் அந்த சிறப்பு கோபுர கும்பத்தை எப்படி மேலே ஏற்ற வேண்டும் என்பதைக் கூறினான். உடனே யாவரும் அவன் கூறிய படியே கோபுர கும்பத்தை மேலே ஏற்றி ஆலய நிர்மாணத்தை முடித்தார்கள்.
யாவரும் வேலை முடிந்தது பற்றி மகிழ்ந்தாலும் அது ஒரு இளைஞன் கூறியதன் பேரில் தான் ஆலய நிர் மாண வேலை முடிவுற்றது என்பதை மன்னன் அறிந்தால் தமக்கு எவ்வளவு இகழ்ச்சி என்று தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை தர்ம பாதன் கேட்டு விட்டான்.
அவ்வளவு தொழிலாளர்களும் இவ்வளவு காலமாக வேலை செய்து விட்டு பேரும் புகழும் இல்லாமல் போவதா என்று தர்மபாதன் யோசித் தான். தன்னால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டு கெட்ட பெயரும் வந்து விடக் கூடாதென்று எண்ணி அவன் அதே இரவில் பொங்கி வந்த கடலினுள் ஐக்கியமாகி விட்டான்.''
சோமநாதர் இக்கதையைக் கூறி "இது பழங்காலத்துக் கதை தான். ஆனால் இதில் நீங்கள் வரலாற்றைக் காண்கிறீர்கள். சிற்பக்கலையின் உயர்வை அறிகிறீர்கள். யாவற்றிலும் மேலாக மனிதனின் உயர்ந்த பண்பு களை குறிப்பாகத் தியாகத்தைப் பற்றி அறிகிறீர்கள்" என்றார்.
அம்புலிமாமா
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."