நோய்களை விரட்டு!
![]() |
நோய்களை விரட்டு!-Drive away diseases! |
நோய்களை விரட்டு!
ஊரிலிருந்து வந்திருந்தார் தாத்தா. பேரன் கண்ணனை மிகவும் பிடிக்கும்; அவனும் தாத்தாவிடம் ஆசையாக இருப்பான்; அவர் கூறுவதை கருத்துடன் கேட்பான்.
உணவு பரிமாறினாள் கனகா, காய்கறிகளை தட்டில் ஒதுக்கி, வெறும் குழம்பு, சாதத்தை மட்டும் சாப்பிட்டான் கண்ணன். பொறுமையாக, "எதற்காக காய்கறிகளை தள்ளி வைத்து விட்டாய்...அவற்றை சேர்த்து சாப்பிட்டால் தான் ஊட்டசத்து சேரும்... தாத்தாவை போல் உயரமாக... அப்பா மாதிரி, பலசாலியாக வளர வேண்டாமா..." என்றார் தாத்தா.
"காயெல்லாம் எனக்கு பிடிக்காது..." “அப்படி சொல்ல கூடாது நீ... சமத்து பையன் தானே... சாப்பிட்டு பழகினால் எதுவும் பிடிக்கும்; சாம்பாரில் கிடக்கும் குடை மிளகாய், பொரியலில் உள்ள புரோகோலியில் வைட்டமின் சத்துகள் நிறைந்து உள்ளன;
இதுபோல, முட்டை கோஸ், கீரை, முளைக்கட்டிய பயிறு, பப்பாளி, மாம்பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு பழங்களிலும் நிறைய சத்துகள் உள்ளன... "இந்த சத்துள்ள உணவை சாப்பிட்டால் நீ அழகுடன் இருக்கலாம்; தோல் பளபளவென மின்னும்; கண்கள், 'பளிச்’ என தெரியும்; நோய்கள் ஆண்டாது; எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; முக்கியமாக, பக்கத்து வீட்டு அண்ணனுக்கு, சின்ன வயசில் தலைமுடி நரைத்து விட்ட மாதிரி, உனக்கு ஏற்படாது...
குழந்தைகளே... எல்லாவித காய்கனிகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன; அவற்றை சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
கதை ஆசிரியர் :என்.கிருஷ்ணமூர்த்தி
வாரமலர்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie
கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."