sirukathaigal

கங்கை போனது!

கங்கை போனது!-The Ganga is gone!

கங்கை போனது!

ஒரு ஊரில் ஒரு அப்பாவி பிராம்மணன் இருந்தான். அவன் ஏதோ ஓரு பாவம் அறியாமல் செய்துவிட்டான். ஊரார் அவனிடம் "நீ கங்கை நதியில் குளித்தால் இந்தப் பாவம் போய்விடும். அங்கேயே கரையில் அமர்ந்து ஜெபமும் செய்" என்றார்கள். அதனால் அந்தப் பிராம்மணன் தன் சொத்தை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு கங்கையில் குளிக்கக் கிளம்பிவிட்டான்.

சில நாட்கள் நடந்து அவன் ஒரு கால்வாயைக் கண்டான். அதுதான் கங்கை என நினைத்து அதன் கரையில் தங்கி தினமும் அதில் குளித்து ஜெபம் செய்ய லானான். ஒரு நாள் ஒரு சன்னி யாசி அவனைப் பார்த்து அப் பனே! இங்கே என்ன செய்கி றாய்?' என்று கேட்டார்.

அந்த பிராம்மணனும் “என் பாவத்தைப் போக்கிக் கொள்ள இந்த கங்கை நதியில் குளித்து ஜெபம் செய்கிறேன்'' என்றார். அதுகேட்டு சன்னியாசி சிரித்து “இது கங்கை நதி இல்லை. ஒரு கால்வாய், கங்கை நதி வெகு தூரத்தில் இருக்கிறது. அது இதை விட 'அகலமானது" என்று கூறி விட்டுப் போனார்.

பிராம்மணன் அங்கிருந்து எழுந்து பல நாட்கள் நடந்து ஒரு பெரிய ஆற்றைக் கண்டான். சன்னியாசி கூறியபடி அது அகல மாக இருந்ததால் அதுதான் கங்கை நதி என்று எண்ணி அதில் தினமும் குளித்து கரையில் அமர்ந்து ஜெபம் செய்யலானான். 

ஓருநாள் அவ்வழியே ஒரு மந்திரவாதி வந்தான். அவன் அந்த பிராம்மணனைக் கண்டு "இந்தக் காட்டாற்றின் கரையில் உட்கார்ந்து கொண்டு ஏன் ஜெபம் செய்கிறாய்?" என்று கேட்டான். அதைக் கேட்ட பிராம்மணன்"இது கங்கை நதி இல்லையா?" எனவே அவனும் 'அட பாவமே! இதையா கங்கை நதி என்று நினைத்து இதில் குளித்து வருகிறாய்! கங்கை நதி இன்னும் வெகு தூரத்தில் உள்ளது. அதில் பலர் குளிப்பதைப் பார்க்கலாம். இந்த மாதிரி ஜன நடமாட்டமே இல் லாமல் அது இராது" என்று கூறி விட்டுப் போனான். 

பிராம்மணனும் தன்மனதில் "இவன் வந்து இது கங்கை நதி இல்லை என்று கூறியது எவ்வளவு நல்லதாகிப் போய்விட்டது. இல்லாவிட்டால் இந்த காட்டாற்றை கங்கை என நினைத்து என் ஆயுள் காலம் முழுவதையும் இங்கேயே கழித்திருப்பேன். என் பாவமும் என்னைவிட்டு விலகாமலேயே இருந்திருக்கும்" என்று எண்ணி அங்கிருந்து கிளம்பினான்.

பல வாரங்கள் நடந்து அவன் ஒரு நதியைக் கண்டபோது அவன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லா மல் போயிற்று. ஏனெனில் அதில் பலர் குளித்துக் கொண்டிருந் தார்கள். பிராம்மணனும் அந் நதியில் தினமும் குளித்து கரை யில் அமர்ந்து ஜெபம் செய்ய லானான். இப்படியே சில மாதங்கள் கழிந்தன.

ஓருநாள் அவன் அந்நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது அவனருகே நின்ற ஒருவர் “சப்த நதிகளில் ஒன்றான நர்மதா நதியே! இப்போது நான் செய்யும் ஸ்நானத்தால் என்னைப் புனித மாக்கு" என உரக்கக் கூறி அதில் முங்கி எழுந்தார்.

அதைக் கேட்ட பிராம்மணன் திடுக்கிட்டுப் போனான். உடனே அவன் அருகில் நின்றவரிடம் "இது கங்கை நதி இல்லையா?' என்று கேட்கவே அவரும் "இது நர்மதை நதி. கங்கை நதி இங் கிருந்து வெகுதூரத்தில் உள்ளது" என்றார்.

அதுகேட்டு பிராம்மணன் பெரு மூச்சு விட்டவாறே” நான் இதை கங்கை நதி என்று நினைத்துவிட்டேன். இனி அதைத் தேடிப் போகிறேன்.'' எனக் கூறி அங்கிருந்து கிளம்பினான். அவன் பல நாட்கள் நடந்து சோர்ந்து போனான். ஆனாலும் கங்கையைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் எப்படியோ தட்டுத்தடுமாறி நடந்து முடிவில் கங்கைக் கரையை அடைந்துவிட்டான்.

அங்கு பலர் 'ஆகா! கங்கா நதியே. புனிதமான உன்னைப் பூசிக்கிறோம். என உரக்கக் கூறி அதில் ஸ்நானம் செய்வதை அந்த பிராம்மணன் கண்டான். உடனே அவன் ஆ! கங்கை நதி வந்து விட்டது "எனக் கூறி அந்தக் கரையிலேயே விழுந்து இறந்து போனான்.

எமதூதர்கள் அவனது உயிரை எடுத்துக் கொண்டு எமலோகம் செல்லவே எமனும் தன் கணக்கன் சித்திர குப்தனைப் பார்த்து "இவன் செய்த பாவங்கள் யாவை? என்று கேட்டான். சித்திர குப்தனும் "இவன் செய்தது ஒரே பாவம்தான். ஆனால் இருபது வருஷமாக கங்கா ஸ்நானம் என்று கூறிக் கொண்டே குளித்தால் அந்தப் பாவமும் மறைந்து போயிற்று" என்று கூறினான்.!

கதை ஆசிரியர்:எஸ். சோபினி

அம்புலிமாமா


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."