sirukathaigal

மனிதனும் குரங்கும்

 மனிதனும் குரங்கும்-Man and monkey

 மனிதனும் குரங்கும்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து "மன்னனே! இந்த பயங்கர நடு ராத்திரியில் துணிவுடன் இப்படி முயல்கிறாயே. உன்னை யாரா வது ஒரு மன்னன் இவ்வாறு செய் யத் தூண்டினானா? சில சமயங் களில் மன்னர்களும் நீதிபதிகளும் எடுக்கும் முடிவுகள் சரியானவையாகஇல்லாதும் போகலாம். உனக்கு சிரமம் தெரியாமல் இருக்க ஒரு கதை கூறுகிறேன். கவனமாகக் கேள்" என்று கூறி கதை சொல்லாயிற்று.

கமலாபுர நாட்டில் சூரப்பன் என்ற விவசாயி இருந்தான். அவனது மகன் ராமய்யன் அவனுக்கு இசை என்றால் மிகவும் விருப்பம் அவன் சிறு வயதிலேயே இனிமையாகப் பாடினான். இசையில் நல்ல பயிற்சி பெற்று இசைத் துறையில் வித்வானாகிப் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவன் தகப்பனோ அவனை விவசாயத்தில் ஈடுபடுத்த எண்ணினான். இசையால் எந்த லாபமும் இல்லை என்பதும் விவசாயத்தால் பயிர் விளைவித்து பணம் சம்பாதிக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

ராமய்யனுக்கோ விவசாயத்தில் மனம் செல்வில்லை. தான் சங்கீதம் கற்றுக் கொள்ளப் போவதாக அவன் சூரப்பனிடம் கூறினான். சூரப்பனோ அது நடக் காது எனவே ராமய்யன் முரண்டு பிடித்தான். சூரப்பன் அவனை ஒரு அறையில் போட்டுப் பூட்டி இரண்டு நாட்கள் உண்ண எது வும் கொடுக்காமல் பட்டினி போட்டான். முடிவில் ராமய்யன் தன் தந்தையின் விருப்பப்படியே நடப்பதாகக் கூறவே சூரப்பன் அவனை அறையிலிருந்து விடு தலை செய்து சாப்பாடு போட்டான்.

ராமய்யன் தன் தந்தையோடு முழு மூச்சுடன் விவசாயத்தில் ஈடுபட்டான். முதல் இரண்டு வருடங்களில் நல்ல விளைச்சலும் கண்டது. ஆனால் அடுத்த ஆண்டு மழையும் இல்லாமல் கடும் பஞ்சம் ஏற்படவே மக்கள் தம் ஊரை விட்டு வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூரப்பனாலும் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. அவன் தான் பட்ட கடனுக்காக நிலங்களை இழக்க வேண்டிய தாயிற்று. அவனும் தன் குடும்பத் தோடு ஊரைவிட்டு வெளியேறி னான். அந்தக் குடும்பம் வழியில் ஒரு மரத்தடியே தங்கியது. அப் போது மரத்தின் மீதிருந்து ஒரு குரங்குக் குட்டி அவர்கள் இருந்த இடத்தில் விழுந்தது. சூரப்பன் அந்தக் குரங்குக் குட்டியைத் தூக்கி தன்னோடு வைத்துக் கொண்டான்.

சூரப்பன் குடும்பம் பட்டணத்தை அடைந்தது. ஆனால் அவர்களுக்குத் தங்க இடமே கிடைக்காததால் ஒரு மரத்தடியே இருந்து காலம் கழிக்க வேண்டியதாயிற்று. ராமய்யன் பட்டணத்து வீதிகளில் திரிந்து மூட்டை தூக்கிக் கூலி பெற்று வரலானான். சூரப்பன் குரங்கிற்கு வித்தைகள் கற்றுக் கொடுக்கலானான். முதலில் குரங்கு அவன் சொன்னபடிக் கேட்கவில்லை. ஆனால் சூரப் பன் இரண்டு நாட்கள் அதனைப் பட்டினி போட்டான். அப்போது தான் அது அவன் சொன்னபடி எல்லாம் செய்தது.

 

சூரப்பன் பட்டணத்தில் பல இடங்களில் குரங்கைக் கொண்டு வித்தைகள் செய்வித்து சம்பாதிக்கலானான். அதில் அவனுக்கு ராமய்யனுக்குக் கிடைத்ததைவிட அதிகமாகக் கிடைத்தது. அப்போது ராமய்யன் சூரப்பனிடம் "நான் பாட்டுப்பாட இந்தக் குரங்கு ஆடினால் இப்போது கிடைக்கும் காசுகளைப்போல பல மடங்கு கிடைக்கும்" என்றான். சூரப்பனும் அப்படியே செய்து பார்க்க ஒரு நாளுக்குச் சாதாரணமாகக் கிடைப்பதைவிடப் பத்து மடங்கு பணம் கிடைத்தது. 

ஒருநாள் பட்டணத்துத் தெருவில் ராமய்யன் பாடி குரங்கு  ஆடிக்    கொண்டிருந்த போது பிரபல சங்கீத  வித்வான் பிச்சைய்யா  அவ்வழியே வந்தார்.அவர் ராமய்ய னின்  குரல் வளத்தையும் நயத்தையும் கேட்டு ராமய்யனைக் கூப்பிட்டு "உனக்கு நல்ல குரல் இருக்கிறது. இசையிலும் ஆர்வம்  இருப்பதும்  தெரிகிறது.   இப்படிக் குரங்கிற்குப் பாடி உன் வாழ் நாளை  வீணாக்காதே.  

இப்போதே    என்னுடன்   வா. நீ   முறைப்படி   சங்கீதம்   கற்றுப்   பேரும்   புகழும் பணமும்     பெற்று     பெரிய    சங்கீத         வித்வானாகத்     திகழலாம்"     என்றார்.  ராமய்யனும்   அப்போதே    அவருடன்   கிளம்பிச்    செல்லத்   தயாரானான்.   அது கண்டு   சூரப்பன்   ராமய்யனையும்   பிச்சைய்யாவையும்   திட்டினான்.  அவர்கள் அதை லட்சியம் செய்யாமல் சென்றனர்.


இதற்குப்பின் சூரப்பன் தன் குரங்கை வைத்து சம்பாதித்து கொண்டிருந்தான். இரண்டு மூன்று வருடங்களில் கொஞ்சம் பணம் சேரவே அவன் ஒரு குடிசையை வாங்கி அதில் வசித்து வரலானான். 

ஒருநாள் திடீரென சூரப்பனுக்கு ஒரு பெரும் பணக்காரரிட மிருந்து அவனது குரங்காட்டத்தைக் காண விரும்புவதாகவும் அவன் அவரது வீட்டிற்குத் தன் குரங்கோடு வர வேண்டும் என்றும் செய்தி வந்தது. அதற்கு ஆயிரம் வராகன்கள் கிடைக்கும் என்று அறிந்ததும் சூரப்பன் தன் குரங்கோடு அந்தப் பணக்காரரின் மாளிகைக்குச் சென்றான்.

 

அங்கு        வேலைப்பாடுடன்     கூடிய அழகான   ஆசனத்தில்    அம்மாளிகையின் சொந்தக்காரர்   அமர்ந்திருந்தார்:   அந்தக்   கூடத்தில்   அவரையும் சூரப்பனையும் அவனது குரங்கையும் தவிர  வேறு யாரும்   இல்லை.  குரங்காட்டம் முடிந்ததும் அந்தப் பணக்காரர் ஆயிரம் வராகன்கள் அடங்கிய   ஒரு   மூட்டையை    சூரப்பன் முன்   விட்டெறிந்து '   என்னை   நீ   இன்னமும்   யாரென்று     அறியவில்லையா? நான்  தான்  ராமய்யன். இந்த ஆயிரம்   வராகன்களை  எடுத்துக்   கொண்டுபோய் சுகமாக வாழ்" என்று கூறினான்.

அப்போதுதான் சூரப்பனுக்கு அவன் தன் மகன் என்பது தெரிந்தது. அவன் "மகனே! நீ இவ்வளவு பெரிய பணக்காரனாக எப்படி ஆனாய்?" என்று ஆவ லுடன் கேட்டான்.

ராமய்யனும் "என் ஆசிரியர் ஓராண்டு காலம் இசைப் பயிற்சி அளித்தார். அதன் பிறகு இந்நாட்டு மன்னரின் ஆதரவு கிட்டியது. இதுவரை எனக்கு இரண்டு கனகாபிஷேகங்கள் கூட என் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இப்போது என்னிடம் உள்ள சொத்து பத்து தலைமுறைக்கும் மேலாகச் செலவு செய்தாலும் குறையாது' என்றான். 

அப்போது சூரப்பன் "நீ இவ் வளவு பெரிய பணக்காரன் ஆன பிறகு நான் குரங்காட்டம் காட்டி இனிப் பிழைக்க வேண்டியதில்லை. இதை உன் தாயிடம் சொன்னால் எவ்வளவு சந்தோஷப் படுவாள்' என்று மகிழ்ச்சியுடன் கூறினான். அதற்கு ராமய்யன் “நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நீயோ, என் தாயாரோ இந்த வீட்டு வாசற்படியைக்கூட மிதிக்கக் கூடாது. என் தாயாரைப் பார்க்க நான் ஆசைப்பட்டால் நானே அவள் இருக்கும் இடத் திற்கு வந்து பார்ப்பேன். என்னை நீங்கள் வளர்த்தற்காக இந்த ஆயிரம் வராகன்களைக் கொடுத்து என் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன். நான் விரும்பும்போது உங்களுக்குப் பண உதவியும் செய்கிறேன். ஆனால் நீயாக என்னிடம் கேட்கக் கூடாது. இனி நீ போகலாம்" என்று கூறி அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

சூரப்பன் தன் வீட்டிற்குப் போய் தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். அதுகேட்டு அவள் கோபத்தோடு "பெற்ற தாயையும், தந்தையையும் படி ஏற வேண் டாம் என்றா கூறினான்? நாம் போய் நீதிபதியிடம் நியாயம் கேட்போம்” என்றாள். 

அவர்கள் இருவரும்   நீதிமன்றத்தில்    நீதிபதியிடம்    முறையிட்ட னர்.  அவரும் ராமய்யனை வர வழைத்து விசாரித்து எல்லாம் தெரிந்து கொண்டார். அவர் முடி வில் "ராமய்யன்   தனக்கு    சங்கீதம் கற்றுக்   கொடுத்தவரைத்  தன்   தந்தையாக எண்ணி   அவரை    அவரது குடும்பத்தோடு தன் வீட்டில் வைத்துக்   கொண்டான். அது   முற்றிலும்   சரியே.   ஆனால்   அவன்     தன்   பெற்றோர்களுக்கு    ஆயிரம் வராகன்கள்    கொடுத்து   விட்டால் பொறுப்பு   முடிந்துவிட்டது  என  நினைத்தது தவறு.   அவன்    அவர்களுக்கு   தனக்குப்    பதிலாக ஒரு    குரங்குக்    குட்டியைக் கொடுக்க வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்.

வேதாளம் இக்கதையைக் கூறி 'மன்னனே! ஒரு மகனுக்குக் தன் தாய் தந்தைதயர்களை வைத்துக் காப்பாற்றுவது தானே முதற் கடமை. ஆனால் ராமய்யன் அப்படிச் செய்யவில்ைல. நீதிபதியும் அந்தப் பெற்றோர்களுக்கு ஒரு குரங்குக் குட்டியைக் கொடுத்தால் சரி என்று தீர்ப்புக் கூறினாரே! இதெல்லாம் நியாயமா! இவற் றிற்குச் சரியான பதில் தெரிந் திருந்தும் நீ கூறாவிடால் உன் தலை வெடித்துச் சூக்கு நூறாகி விடும்" என்றது. 

விக்கிரமனும் "மனிதனுக்கு மூளை இருப்பதால் மிருகங்களை விட உயர்ந்தவன். அதனால் மனி தர்கள் பல துறைகளில் சிறந்த விளங்குகிறார்கள். அவர்கள் தம் மக்களுக்கும் தக்கபடி கல்வி அளிக் கிறார்கள். சூரப்பன் அவ்வாறு செய்யாமல் தன் மகனை வயலில் வேலை செய்ய வைத்தான். தன் மகன் விரும்பிய இசையைக் கற்கவிடவில்லை. அவன் குரங் குக் குட்டியை பட்டினி போட்டு எப்படி வித்தைகளைச் செய்ய வைத்தானோ அதுபோல ராமய் யனைப் பட்டினி போட்டு விவ சாயம் செய்ய வைத்தான். எங்கோ பிறந்த குரங்கு தான் சம்பாதித் ததைத் தன் தாய் தந்தையருக்குக் கொடுக்காமல் சூரப்பனுக்குக் கிடைக்கச் செய்தது. இதுபோல ராமய்யன் தனக்குப் பயிற்சி அளித்து முன்னுக்கு வரச் செய்த தன் குருவையும் அவரது மனைவி யையும் தன் தாய் தந்தையர் களாகக் கருதித் தன்னோடு வைத் துக் கொண்டான். ராமய்யன் தன் பெற்றோரைவிட்டு வந்துவிட்ட தால் அவனுக்கு பதிலாகக் குரங் குக் குட்டியை நீதிபதி கொடுக்கச் செய்தது சரியே. சூரப்பன் அதைத் தன் இஷ்டம்போலப் பழக்க அது அவனுக்கு மகனைப் போலப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும். எனவே ராமய்யன் செய்ததும் நீதிபதியின் தீர்ப்பும் சரியே" என்றான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

அம்புலிமாமா



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."