sirukathaigal

மருமகளை விரட்டிய மாமியார் !

 மருமகளை விரட்டிய மாமியார் -Mother-in-law chased away daughter-in-law


மருமகளை விரட்டிய மாமியார்! 

சமீபத்தில், ஒரு முதியோர் இல்லத்திற்கு போயிருந்தேன். எல்லாருக்கும் வயது. 7Oக்கு மேல் இருக்கும். அவர்களின் நடுவின்,40 வயதுடைய ஒரு பெண்மணி இருந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. 

'நீங்கள், ஏன் இந்த வயதில் இங்கு தங்கியுள்ளீர்..." என, கேட்டேன். உடனே அவர், வருத்தத்துடன், 'சார்... அப்பா, அம்மாவை, பையனும், மாட்டுப் பெண்ணும் தான் விரட்டியடித்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர் என்று, எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மாமனார் – மாமியார் கொடுமை தாங்காமல் தான், நான் இங்கு வந்து விட்டேன். 

'ஐ.டி.,யில் பெரிய வேலையில் இருக்கிறேன். நல்ல சம்பளம். கணவர், துபாயில், ஐ.டி., தம்பெனியில் வேலை செய்கிறார். எனக்கு குழந்தை இல்லை. அதை அடிக்கடி சொல்லிக் காட்டி, என்னை, 'டார்ச்சர்' பண்ணுகின்றனர். 'பையனுக்கு வேறு இடத்தில் இரண்டாவது கல்யாணம் செய்ய தீர்மானித்துள்ளனர். அதற்கு நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என, எண்ணுகின்றனர். 

'என் கணவர் வர, இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகும். நல்லவர் தான், அவர் வரும் வரை இங்கு இருப்பேன். எனக்கு பெற்றோர் இல்லை. தனியாக வீடு பார்த்து இருக்க முடிந்தாலும், இங்கு, நல்ல சாப்பாடு, காற்றோட்டமான, 'ஏசி' வசதி மற்றும் பாதுகாப்பும் உள்ளது...' என்றார். 'மாமியாரை விரட்டிய மருமகளும் உண்டு; மருமகளை விரட்டிய மாமியாரும் உண்டு...' என்று நினைத்துக் கொண்டேன். 

கதை ஆசிரியர் : ஆர். சேஷாத்திரி,
வாரமலர்



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."