சிக்கனம் எப்படி?
![]() |
| சிக்கனம் எப்படி?-How about frugality |
சிக்கனம் எப்படி?
தென் மாவட்டத்தில் வறண்ட பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் சுப்பைய்யா என்றும் சின்னைய்யா என்றும் இரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அப்பகுதியில் எவ்வித வேலையும் கிடைக்கவில்லை. அதனால் தம் ஊரைவிட்டுப் போய் பட்டணத்தில் ஏதாவது வேலை செய்து பிழைப்பது என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
அப்போது சுப்பைய்யா "நமக்கு சாப்பிட தினமும் கால்படி அரிசியும் இரண்டு வெங்காயமும் இருந்தால் போதும். நாம் சம்பாதிப்பதை இவற்றிற்கு மட்டும் செலவு செய்து மீதப் பணத்தைச் சேகரித்து சிக்கனமாக வாழ்ந்து வருவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். அதனால் நம்மிடம் சேரும் பணத்தால் ஏதாவது ஒரு தொழிலையோ அல்லது வியாபாரத் தையோ தொடங்குவோம்" என்றான். சின்னைய்யாவும் அதற்குச் சம்மதிக்க, இருவரும் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இருவரும் தம் ஊரை விட்டுப் புறப் பட்டு தொழில் நகரமான பட்டணத்தை அடைந்தார்கள். அப்போது சுப்பைய்யா "இனி நாம் ஒருவர் மற்றவருக்கு பாரமாக இராமல் பிரிந்து செல்வோம். வேலை தேடிப் பிழைத்துக் கொள்வோம். ஆனால் நாம் செய்த உறுதி மொழியின்படியே நடப்போம். என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் கொள்வோம்" என்றான். சின்னைய்யாவும் தலையாட்டி விட்டு சுப்பைய்யாவிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான்.
சுப்பைய்யாகிடைத்த வேலைகளைச் செய்தான். உறுதிமொழிக்கு ஏற்றபடி உணவு உண்டு சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்தான். ஆனால் சின்னைய்யா ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உறுதி மொழிப்படி நடந்தான். ஆனால் சம்பாதிப்பது நன்கு சாப்பிடவே என எண்ணி பலவித காய் கறிகளை வாங்கி சமைத்தும் இனிப்புகளைச் செய்தும் சாப்பிட்டான். அதனால் சுகப்பட் டாலும் அவனது மனம் மட்டும் உறுதிமொழியிலிருந்து நழுவியதைச் சுட்டிக்காட்டி உறுத்தியது. எனவே மீண்டும் உறுதிமொழிப்படி நடக்க முயன்றான். ஆனால் ருசியின் சுகம் மீண்டும் அவனை சிக்கனமாக இருக்க விடவில்லை.
இதனால் சின்னைய்யாவால் பணம் சேர்த்து வைத்துக் கொள்ள முடியவில்லை. செலவு அதிகமாகி கடன் என்றெல் லாம் வாங்கிக் கஷ்டப்படலானான். உடல் வேலை செய்ய மறுத்து சுகமாக இருக்க விரும்பியது. அதனால் வேலை எதுவும் செய்யாமல் சரியாகச் சாப்பிடக் கூட முடியாமல் திண்டாடலானான்.
சுப்பையாவோ சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்து சிறுசிறு வியாபாரம் களைச் செய்யத் தொடங்கி முடிவில் பட்டணத்தில் மிகப் பெரிய வியாபாரி களில் ஒருவனாக ஆகிவிட்டான். தன்னோடு வெறுங்கையோடு வந்த சுப்பைய்யா செல்வந்தனாகி நன்கு வாழ்வது கண்டு தன் நண்பனிடம் உதவி பெறஎண்ணி சின்னய்யா அவனது வீட்டிற்குச் சென்றான்.
அவன் சுப்பைய்யாவிடம் அதிர்ஷ்டம் தன்னைக் காலை வாரி விட்டது எனக் கூறித் தன் நிலையை விளக்கி னான். அது கேட்டு சுப்பைய்யா "உனக்கு தினமும் உணவிற்காக அரிசியும் சில வெங்காயங்களும் கிடைக்க ஏற்பாடு-செய்கிறேன். நீ உன் சொந்த பலத்தால் நிலைத்து நிற்க முயற்சி செய். அதுவரை நீ என் வீட்டின் பின் புறத்தில் குடிசை போட்டுக் கொண்டு இருக்க இடமும் கொடுக்கிறேன்” என்று கூறி இடம் கொடுத்தான். தினமும் கால்படி அரிசி யும் இரண்டு வெங்காயமும் சின்னைய் யாவுக்கு அவன் அனுப்பி வந்தான். சின்னைய்யாவும் சாதம் வடித்து வெங்காயத்தைக் கடித்து கொண்டு உணவு உண்டு வரலானான்.
சில நாட்களானதும் சுப்பைய்யா சின்னைய்யாவை அழைத்து "தினமும் பச்சை வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாதம் சாப்பிட்டு நீ அலுத்துப் போயிருப்பாய். அதனால் நீ ஒரு வேலை செய். என் புளியந் தோப்பிலுள்ள சிறு புளியஞ் செடிகளை உனக்குக் கொடுக் கிறேன். நீ அவற்றின் துளிர் இலைகளைப் பறித்து வெங்காயத்துடன் சேர்த்து துகையல் அறைத்து சாதத்தோடு பிசைந்து சாப்பிடு. ருசியாக இருக்கும்" என்றான்.
சின்னைய்யாவும் அவ்வாறே செய்ய தோப்பிலிருந்த சிறிய புளியச் செடிகளி லிருந்ததுளிர் இலைகளெல்லாம் தீர்ந்து போயின. அப்போது அவன் போய் சுப்பைய்யாவைக் கண்டு "நீ சொன்ன படியே சிறு புளியஞ் செடிகளிலிருந்து இளந்துளிர்களைப் பறித்து துகையல் அறைத்துச் சாப்பிட்டேன். இப்போது பறிக்க ஒரு இலைக்கூட அச் செடிகளில் இல்லை" என்று தயங்கி தயங்கிக் கூறினான்.
அதைக் கேட்ட சுப்பைய்யா "பரவா யில்லை. அதனால் என்ன? பெரிய புளியமரங்கள் உள்ளன. அவற்றில் துளிர் இலைகள் இருக்கும். பறித்துக் கொள்” என்றான். சின்னைய்யாவும் தன் நண்பன் கூறியபடியே பெரிய மரங்களிலிருந்து துளிர் இலைகளைப் பறித்து துகையல் அறைத்துச்சாப்பிட்டு வந்தான்.
சின்னைய்யாவும் "சிக்கனத்தால் எவ்வாறு உயர்வு அடையலாம் என்பது இப்போது தான் புரிந்தது. இனி நான் நீ கூறிய அறிவுரைப்படியே நடக்கிறேன்" எனக்கூறினான்.
கதை ஆசிரியர் :சு.சோபினி
அம்புலிமாமா




கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."