sirukathaigal

நேர்மையான மாப்பிள்ளை!

நேர்மையான மாப்பிள்ளை!-Honest groom!

 நேர்மையான மாப்பிள்ளை!

திருமண தகவல் மைய வாயிலாக, உறவினர்  மகளை, பெண் பார்க்க வந்தனர், வரன் வீட்டார். மாப்பிள்ளையின் படிப்பு, வேலை குறித்து, 'பயோடேட்டா'வில் குறிப்பிட்டிருந்தது, எந்தளவுக்கு நிஜம் என்பதை விசாரித்து அறிய விரும்பினார், உறவினர். மாப்பிள்ளையிடம் அதுபற்றி கேட்டதும், அவரின் அம்மா முந்திக்கொண்டு, விவரங்களை, 'ஓவர் பில்ட் அப்' கொடுத்து நீட்டி, முழக்கினார். 

உடனே, அவரை தடுத்து மாப்பிள்ளை, 'எங்க  அம்மா சொல்றதெல்லாம் பொய்.
திருமண தகவல் மையத்துல, என்னைக் கேட்காமலே, இவங்களா பதிவு பண்ணியிருக்காங்க. 'பயோடேட்டா'வுல உள்ள படிப்பு உண்மை. 'ஆனா, வேலை, சம்பளம் பற்றிய தகவல்கள் உண்மையில்லை. இந்த விஷயம், பொண்ணு பார்க்க வந்த பிறகு தான், எனக்கே தெரிய வந்தது.

'உண்மையில், எனக்கு நிரந்தர வேலை இல்லை. குறைந்த சம்பளத்துக்கு, 'பார்ட் டைம் ஜாப் பார்த்துக்கிட்டு, நல்ல வேலை தேடிக்கிட்டிருக்கேன்...' என்று, உண்மையை போட்டு உடைத்தார். இதைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், உறவினர் மகள், நேரடியாக மாப்பிள்ளையிடம் பேசினாள்.

'வேலை இல்லாட்டியும், ஒரு பெண்ணை, பொய் சொல்லி கட்டிக்கிட்டு ஏமாத்தி, நம்பிக்கை துரோகம் பண்ணிடக் கூடாதுங்கிற நேர்மை உங்களிடம் இருக்கு. அதுக்காகவே, உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க தயார்.

'எங்க ஆபிஸ்ல, குறைந்த சம்பளத்துல, ஒரு வேலை காலியா இருக்கு. என்னால உங்களுக்கு அந்த வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியும். கவுரவம், மற்றும் 'ஈகோ' பார்க்காம, அந்த வேலையில் சேர நீங்க தயாரா?' என்றாள். முழு மனதோடு, மாப்பிள்ளை ஒப்புதல் கூற, இனிதே நடந்தது, திருமணம். இப்போது, சிறப்பாக வாழ்கின்றனர். நேர்மை குணம், மிக மிக நல்லது.

கதை ஆசிரியர்:ஆர்.செந்தில்குமார், 

வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."