sirukathaigal

இந்தியப் பண்பாடு வரலாறு

இந்தியப் பண்பாடு வரலாறு-History of Indian Culture

இந்தியப் பண்பாடு வரலாறு

 பண்பாடு மலர்ந்த மாபெரும் ஆரண்யம்

சோமநாதருடன் நதிக்கரையில் சேகரும் சியாமளாவும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சேகர் "தாத்தா! நீங்கள் சொன்ன ஊர்கள், நாடுகள் பெயர்களெல்லாம் நல்ல மனிதர்களின் தற்செயல்களை நினைவில் வைத்துக் கொள்ளத்தானே அவர்களது பெயர்களோடு இணைக்கப்பட்டன?'' என்று கேட்டான். தாத்தாவும் "அதுதான் காரணம் என்று முழுமையாகச் சொல்லி விடமுடியாது. சில சமயங்கள் நற்செயல்களைச் செய்யாத கொடியவர் களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளவும் சில பெயர்கள் வைக்கப் பட்டும் உள்ளன" என்றார். 

சியாமளாவும் "அப்படியா? கொடிய வர்களின் பெயர்கள் கூட நாடு நகரங்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றனவா?' என்று ஆச்சரியப்பட்டவாறே கேட்டாள். சோமநாதரும் "சில சமயங்களில் கொடிய சம்பவங்கள் நிகழ்ந்ததை நாம் மறந்து விடுவதில்லை. அதனால் கொடியவர்களின் பெயர்கள் கூட அச்சம்பவங்களை நினைவில் வைத்துக் கொள்ள அவரகளது பெயர்கள் வைக்கப்பட்டு விடு கின்றன" என்றார்.

சேகரும் "அப்படியா தாத்தா! அவ்வாறு பெயரிடப்பட்ட ஒரு பகுதியைப் பற்றி இன்று எங்களுக்கு கூறுகிறீர்களா" என்று கேட்டான். சோமநாதரும் "ஆகா! சொல்கிறேன். இதற்கு நல்ல உதாரணம் தண்டகாரண்யம் என்ற காட்டுப் பகுதியே" என்றார். சேகரும் "இது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரல்லவா?” என்று கேட்டான். 

சோமநாதரும் ''ஆமாம். ராமாயணத்தில் வரும் பல நிகழ்ச்சிகள் இந்த தண்டகாரண்யத்தில் நடந்தவை. உலகின் மிக பெரிய காடுகளில் இந்த தண்டகாரண்யமும் ஒன்று. இது மிகப் பழமையானது என்பது மட்டுமல்ல உயரிய பண்பாட்டை மலரச்செய்தது என்றும் கூறலாம். இதற்கு இணையான காட்டுப்பகுதி உலகில் வேறு எங்கும் இல்லை." என்றார்.

சியாமளாவும் "தண்டகாரண்யம் புராண காலத்து ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட வனப்பகுதி. ஆனால் அது இன்று எங்கே இருக்கிறது?" என்றும் கேட்டாள். சோமநாதரும் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் தண்டகாரண்யமும் அழிந்து விட்டிருக்குமோ என்று சந்தேகப் படுவது இயல்பு தானே. தண்டகாரண் யத்தில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை நாம் ராமாயணத்தில் படிக்கிறோம். இங்கு தான்முனிவர்களின் யாகங்களை அழிக்க முயன்ற இராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமரை மணக்க விரும்பி லட்சுமணனிடம் அவமானப்பட்டு காது, மூக்கு அறுபட்டு ஓடியதும் இங்கு தான் நிகழ்ந்தது. 

இந்த வனத்திலிருந்து தான் சீதையைக் கவர்ந்து சென்று கொண்டிருந்த ராவணனை எதிர்த்து ஜடாயு போர் புரிந்தான். இம்மாதிரி இங்கு பல சம்பவங்கள் நடந்துள்ளன. இன்று இந்த மாபெரும் காடு மத்தியபிரதேசம் ஆந்திரா, ஒரிஸ்ஸா மாநிலங்களில் பரவிக் கிடக்கிறது" என்றார்.

அப்போது சேகர் "தாத்தா! இந்த மாபெரும் காட்டிற்கு தண்டகாரண்யம் என்ற  பெயர் ஏன் வந்தது?" என்று  கேட்டான். சோமநாதரும் ''இப்பகுதி ஒரு காலத்தில் தண்டகவம்சத்து மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த வம்சத்து மன்னர்களில் ஒருவனான தண்டகன்   இளைஞன். அவன் எப்போதும் சுகபோகங்களில் மூழ்கி இருக்க விரும்புபவன். 

ஒரு நாள் அவன் குதிரை மீது அமர்ந்து செல்கையில் ஒரு தடாகத்தில் குளித்து விட்டு வந்து கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தியைக் கண்டான். சாதாரண பெண்களில் அவ்வளவு அழகானவள் கிடையாது என்பதை அவன் உணரவில்லை "என்று கூறி மேலும் தொடர்ந்தார்.

"அந்தப் பெண் மணியைப் பார்த்து புன்னகைபுரிந்தான். பின்னர் அவள் குதிரைமீதிருந்து இறங்கி ஓடி அவனை வழி மறித்து 'நீ வழி தவறி வந்து விட்டாயா? நான் உனக்கு உதவி புரிகிறேன்'' என்று கேட்டான். அவளோ "அதெல்லாம் இல்லை. நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ" எனவே தண்டகன் "இங்குள்ள மக்களையும் காப்பது தான் என்கடமை. நான் இந்நாட்டு மன்னன் எனவே நான் உன்னை மணந்து கொண்டு உனக்கு உதவப் போகிறேன்" என்றான்.

அந்தப் பெண்ணோ "நீ சொல்வதை நான் நம்பமாட்டேன். மன்னனுக்கு நற்பண்புகள் இருக்க வேண்டும். ஒரு பெண்ணை ஒருவன் மணக்க இரு வழிகளே உண்டு. ஒன்று பெண் அந்த ஆடவனை மணக்க சம்மதிக்க வேண் டும். இரண்டாவது அப்பெண்ணின் பெற்றோர்கள் அந்த ஆடவனுக்கு தம் மகளை மணம் செய்து வைக்க இசைய வேண்டும். இந்த இரு வழிகளைத்தவிர முறையானதிருமணம் நடக்க வேறு வழி எதுவும் இல்லை. நான் உன்னை மணக்க விரும்பவில்லை. இத் திருமணம் நடக்க என பெற்றோர் இசைவும் இல்லை. எனவே இவ்விவாகம் நடக்காது" என்றாள்.

தண்டகன் பலமாகச்சிரித்து "பெண்ணே! ஒரு அரசனைத்தம் மருமகனாக ஏற்காமல் எந்தப் பெற்றோர்தாம் இருக்க முடியும்? எனக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் பிடிக்காது. உன்னை இப்போது என் அரண்மனைக்குக் கொண்டு போகப் போகி றேன். அங்கு உன் பெற்றோருக்குப் பணம் அனுப்பி நம் திருமணம் பற்றிய தகவல் அனுப்புகிறேன்" என்றான்.

அவளோ "இது நடக்காது. என் தந்தை சுக்கிரச்சாரியார் இதற்கு இணங்கமாட்டார். நான் அவரது மகள் அரஜை" என்றாள். தண்டகன் அவளது கைகளைப் பற்றி இழுக்கவே அவள் திமிறினாள். அவளது உடலில் பல காயங்கள் ஏற்பட்டன. அவள்அவனைத் திட்டியவாறே அவனிடமிருந்து தப்பி புதர்களிடயே மறைந்து ஓடி விட்டாள்.

தன் மகள் காயப்பட்டு ஓடி வந்தது கண்டு சுக்கிராச்சாரியார்" என்ன நடந்தது?'' என்று விசாரித்தார். அரஜையும் தண்டகன் தன்னிடம் தகாத முறையில் நடந்ததைக் கூறினாள். தண்டகனின் அட்டூழியங்களைப் பற்றி கேட்டறிந்திருந்த சுக்கிராச்சாரியார் ஒரு யாகம் செய்து ஹோமம் குண்டத் திலிருந்து உக்கிரசக்திகளை வர வழைத்து “நீங்கள் அந்த தண்டகனின் நாட்டை நிர்மூலமாக்குங்கள். சாதுக்கள், நல்லவர்கள், ஆகிய வர்களையும் மிருகங்களையும் விட்டு விடுங்கள்" என்றார்.

அவ்வளவு தான்! தண்டகனின் மாடமாளிகை கூடகோபுரங்கள் எல்லாம் நெருப்பில் பொசுங்கின. அந்நாட்டுப்பட்டணங்களுடன் ஊர்களும் எரிந்தன். தண்டகனின் நாடு முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டது. சாதுக்களும் சன்னியாசிகளும் நல்லவர் களும் வேறு நாடுகளுக்குப் போய் விட்டார்கள். அந்தப் பகுதியில் மழையே இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரேசாம்பலாக இஅருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின் காற்றால் அங்கு கொண்டுவரப்பட்ட விதைகள் பரவி விழுந்தன. மழை பெய்தது. அதனால் அவ்விதைகள் முளைத்து மரங்களாகிப்பல வருடங்களுக்குப்பின் வளர்ந்து மாபெரும் காடாகியது. சில நூற்றாண்டுகளுக்குப் பின் அப்பகுதியில் மனிதர்களும் ராட்சஸர்களும் வந்து வாழலானார்கள். இந்த மாபெரும் வனப் பகுதி கொடியவனான தண்டகனின் பெயரில் தண்டகாரண்யம் எனக் கூறப்பட்டது. அப்பெயரே அதற்கு நிலைத்து விட்டது".

(தொடரும்)
அம்புலிமாமா


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."