நண்பரின் பயனுள்ள பழக்கம்!
![]() |
| நண்பரின் பயனுள்ள பழக்கம்!-A friend's useful habit! |
நண்பரின் பயனுள்ள பழக்கம்!
எங்கள் பகுதியில் உள்ள, ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் ஒருவர், ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம், பயனுள்ள பழக்கம் ஒன்றை செயல்படுத்துவதை, விடாமல் கடைப்பிடித்து வருகிறார்.
முன்கூட்டியே, மொத்தமாக வாங்கி வைத்திருக்கும் அஞ்சல் அட்டைகளை, எங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், காலையில், தலா, 20 அஞ்சல் அட்டை மற்றும் ஒரு பேனாவையும், அவரின் புத்தாண்டு பரிசாக தருவார்.
அத்தோடு, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அஞ்சலட்டைகளில், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கைப்பட எழுதித் தர, வேண்டுகோள் விடுப்பார். மாலையில் வந்து, அவற்றை சேகரித்து சென்று, அஞ்சல் பெட்டியில் போடுவார்.
'இவ்வாறு செய்வதால், என்ன பயன்...' என்று கேட்டோம். 'அக்கம்பக்கத்தாருடன் நட்பு பாராட்ட முடிகிறது.கடிதம் எழுதும் கலையை அழியாமல் காக்க முடிகிறது. எல்லாரையும் அன்பால் இணைக்க, தூண்டுகோலாக இருக்க முடிகிறது...' என்றார்.
பரஸ்பர வாழ்த்துக்களால், உலகம் அன்பு மயமாக வேண்டும் என்ற, நல்ல எண்ணத்தில் செயல்படும் அவர் போன்றோர் தான், அவசர யூகத்தின் அத்தியாவசிய தேவை.
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."