வேலைக்காரி என்றால் இளப்பமா?
![]() |
| வேலைக்காரி என்றால் இளப்பமா?-Is being a maid a bad thing? |
வேலைக்காரி என்றால் இளப்பமா?
தெருவில், 'டூ வீலரில்· சென்று கொண்டிருந்தபோது, 'வேலைக்காரி என்றால் இளப்பமா... சட்டை போட்டு வேலை செய்ய கூடாதா... நீங்க ரசிப்பதற்கு வேறு ஆள் பாருங்க...' என, ஒரு வீட்டு முன் நின்று ஆக்ரோஷமாக திட்டிக் கொண்டிருந்தார், ஒரு பெண்.
வேடிக்கை பார்த்த நாங்களும், விஷயத்தை அரை குறையாக தெரிந்து கொண்டு நகர்ந்தோம். அருகில் உள்ள பேக்கரிக்கு. டீ சாப்பிட வந்தேன். அங்கே அந்த பெண்ணும் வர, அவரிடம், என்ன விஷயம் என்று விசாரித்தேன். 'வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு. அந்த நபரின் பார்வையே சரி இல்லை.
ஆதலால், என் வீட்டுக்காரரின் சட்டை அணிந்து வந்து, வேலை செய்தேன். அதை கவனித்தவர், இரண்டு நாட்கள் ஒன்றும் சொல்லவில்லை. இன்று, அவர் மனைவி, பிள்ளைகள் வெளியூர் சென்று லிட்டனர். தனியாக வீட்டிலிருந்தவர், சட்டை அணிந்து வேலை செய்யக்கூடாது....என்றார்.
அவரின் உள் நோக்கம் எனக்கு புரிந்தது. 'சட்டை இல்லாமல் வேலை செய்ய மாட்டேன்...' என்றேன். 'வீட்டு வேலை செய்பவளுக்கு திமிரை பாரு.. என, திட்டினார். 'வேலைக்காரி தானே என நினைத்து, சில ஜென்மங்கள் தவறு செய்ய முயல்கின்றன. அந்த வீட்டுக்காரரின் தவறான நோக்கத்தை பகிரங்கப்படுத்தவே வெளியே வந்து ஆக்ரோஷமாக கத்தினேன்...' என்றார்.
தவறு செய்ய நினைத்த முதலாளியை, நார் நாராக கிழித்து தொங்கவிட்ட பெண்மணிக்கு, ஒரு, 'சபாஷ்' போட்டேன். பெண்களே... தங்களுக்கு வரும் துயரங்களை, துணிவாக எதிர் கொள்ளுங்கள். அப்போதுதான் வாலாட்ட நினைக்கும் ஜென்மங்கள், வாலை சுருட்டிக் கொண்டிருப்பர்!
கதை ஆசிரியர்:ப.சிதம்பரமணி
வாரமலர்
Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best storie

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."