sirukathaigal

அன்புடன் அந்தரங்கம்! பிளாக்மெயில்

பிளாக்மெயில்-Blackmail

அன்புடன் அந்தரங்கம்!3 

பிளாக்மெயில்

வாசகர் கேள்வி :

அன்புள்ள சகோதரிக்கு :

என் வயது: 40. கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன், என்னையும், மகளையும் விட்டு விட்டு, எங்கோ சென்று! விட்டார். கணவர், மகளுடன் நான், பெற்றோர் வீட்டில் அடைக்கலமானேன். 

நான் படித்திருந்ததால், தனியார் நிறுவனம் ஒன்றில், வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். என் பெற்றோரும், கணவரது அண்ணனும் எடுத்த முயற்சியால், வட மாநில வங்கி ஒன்றில், கணவர் பணிபுரிந்து வருவதை கண்டுபிடித்தனர். எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைக்க ஆரம்பித்தனர். 

இதற்கிடையில், என் எதிர் வீட்டு மாடியில் குடியிருக்கும், நடுத்தர வயதுள்ள ஒருவன், இத்தனை ஆண்டுகளாக என்னை நோட்டமிட்டு, பல்வேறு சந்தர்ப்பங்களில், மொபைலில் போட்டோ எடுத்துள்ளான். ஒருநாள், வீட்டில் தனியாக இருக்கும்போது, என்னிடம் தவறாக நடக்க முயன்றான்.  எப்படியோ அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டேன்.

அதன்பின், என் மொபைல் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து, அவன் எடுத்த என் புகைப்படங்களை அனுப்பி, 'மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் போடப் போவதாக மிரட்டி, பணம் பறிக்க ஆரம்பித்தான். பயந்து போய், அவன் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்தேன். கையில் பணம் இல்லாதபோது, நகையை அடகு வைத்து, பணம் வாங்கி கொடுத்தேன்.

என் பெற்றோரின் பெரும் முயற்சிக்கு பின், என்னுடன் சேர்ந்து வாழ சம்மதித்தார், கணவர். ஊருக்கே திரும்பி வந்து, தனிக்குடித்தனம் போனோம். தொடர்ந்து அந்த கயவன், என்னை, 'பிளாக்மெயில்' செய்து வருகிறான். இந்த விஷயம் கணவருக்கு தெரிந்தால், மீண்டும் எங்கள் வாழ்க்கையில் புயல் வீசுமே என்று பயந்து நடுங்குகிறேன். 

இப்போது, என் மகளுக்கு,10வயதாகிறது. அவனது எதிர்காலமும் பாதிக்குமோ என்று பயப்படுகிறேன். இதிலிருந்து மீள எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள், சகோதரி,

ஆசிரியர் பதில் :

அன்பு சகோதரிக்கு :

அந்த நடுத்தர வயதினனிடம் உள்ளது. மார்பிங்' புகைப்படங்களோ, ஒரிஜினல் புகைப்படங்களோ துளியும் கவலைப்படாதே. நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...மீண்டும் சேர்ந்து வாழும் கணவரிடம், பிளாக்மெயில்' பற்றி மூச்சு விடாதே பிளாக்மெயில்' செய்பவனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்து. 

அவனுக்கு துளியும் பயப்படாதே  தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000த்தின் படியும், இந்திய தண்டனைவியல் சட்டம், 1860ன் படியும்,ஐடி சட்ட பிரிவுகள், 67, 67ஏ, 67பியின் படியும், இணைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர்

இணைய குற்றங்கள் பற்றிய புகாருக்கு, 1930 எண்ணை தொடர்பு கொள்.பெண்கள் உதவி எண், 181 இருக்கிறது. தேவைப்பட்டால் அந்த எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் சென்னையில் வசிக்கிறாய் என்றால், காவல்துறை பயிற்சி கல்லுாரி, செக்டார் 10, அசோக் நகரில் இயங்கும் இணைய குற்ற களைவு தலைமையகத்துக்கு நேரே சென்று புகார் தரலாம். 

நேரில் போக விருப்பம் இல்லை என்றால், info@cybercert.in மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பலாம். இந்திய இணைய குற்ற  புகார் உதவி எண்: 1800 2096789 உன் பெயர், முகவரி அடையாளம் மறைத்து கூட அனாமதேய புகாராய் நீ தரலாம்.

சம்பந்தபட்டவனை பிடித்து உதைத்து, அவளிடமிருக்கும் கடன் பணம் மற்றும் புகைப்படங்களை பறிமுதல் செய்து, மன்னிப்பு கடிதம் பெற்ற பிறகு, அவனை விடுவிக்க சொல்லலாம். காரணம், இணைய குற்றங்களில் தண்டனை பெற்றோர் சதவீதம், மிக மிகக்குறைவு. முதல் தகவல் அறிக்கை பதிந்த பிறகு, வழக்கு நீதிமன்றத்துக்கு போகும்.

நீ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும். அதை தவிர்த்தல் நலம் 'பிளாக்மெயிலரை' அப்புறபடுத்திய பின், உன் மொபைல் எண்ணை மாற்று. அந்நிய ஆண்களுடன் கவனமாக பழகு. சிறப்பான தாம்பத்யம் மூலம், கணவருக்கு கால் விலங்கு போடு மகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்து.

அவளுடன் ஆன தகவல் தொடர்பை மேம்படுத்து. அடிக்கடி உன் பெற்றோர் வீட்டுக்கு போய் வா. அவர்களும் உன் வீட்டுக்கு வந்து போகட்டும் உன் தோழிகளுக்கும், உறவுக்கார பெண்களுக்கும் இணைய குற்றங்களை பற்றியும், அதில் புகார் செய்வது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்து.

கதை ஆசிரியர்: சகுந்தலா கோபிநாத் 
வாரமலர்


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


அன்புடன் அந்தரங்கம்! பிளாக்மெயில் அன்புடன் அந்தரங்கம்! பிளாக்மெயில் Reviewed by Sirukathai on ஜூன் 25, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."