மாமனாரின் நல்ல மனசு
மாமனாரின் நல்ல மனசு
உறவினர் ஒருவர், வசதியானவர். அவருக்கு ஒரே மகள். ஏழ்மையான குடும்ப பையனை காதலித்தாள்.
அந்தஸ்தை காரணம் காட்டி, 'அந்தப் பையனுக்கு உங்க மகளை திருமணம் செய்து தரக்கூடாது..." என, உறவினர்கள் பலரும் தடை போட்டனர்.
அதை மீறி, மகள் விரும்பிய ஏழைப் பையனுக்கே திருமணம் செய்து கொடுத்தார். அத்துடன், அவரே செலவு செய்து, மேற்படிப்பு படிக்க வைத்து, மருமகனின் கல்வித் திறனை உயர்த்தினார்.
மேலும், தன்னுடைய தொழிலில் ஈடுபடுத்தி, பயிற்சி கொடுத்து, தொழில் திறனையும் மேம்படுத்தினார். எல்லா வகையிலும் அவன் தயாரானதும், தனியாக தொழில் துவங்க பொருளுதவி செய்து, வழி காட்டி, உதவினார்.
மருமகனும் எந்த, 'ஈகோ'வும் பார்க்காமல், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான். சில ஆண்டுகளில், மாமனாருக்கு இணையான வசதிக்கு உயர்ந்தான்.
இப்போது. 'என் வளர்ச்சிக்கு காரணமே, மாமனாரின் பெருந்தன்மையும்,பேருதவியும் தான்... ' என, நன்றியுடன் கூறுகிறான், மருமகன். முட்டுக்கட்டை போட்டவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு, குடும்பமே சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."