sirukathaigal

பசுமையான பிசினஸ் ஐடியா!


பசுமையான பிசினஸ் ஐடியா!

நண்பரை காண அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். கல்லுாரி விடுமுறையில் வந்திருந்த நண்பரின் மகனிடம், படிப்பு பற்றி விசாரித்தேன்.

'பள்ளியில் படிக்கும்போதே அவனுக்கு தோட்ட வேலைகள் செய்ய பிடிக்கும். கல்லுாரியில் சேர்ந்ததும், இயற்கை விவசாயம் சார்ந்த குழுக்களோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதைக்கொண்டு, மாடித் தோட்டம் அமைச்சுக் கொடுக்கிறதை, பகுதி நேர வேலையாக செய்து வருகிறான்...' என, மகனை பற்றி பெருமையாக கூறினார், நண்பர். 

அதைத் தொடர்ந்து, நண்பரின் மகன், 'தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக ஒரு வாரத்தில், இரண்டு மூன்று வீடுகளுக்கு மாடித் தோட்டம் அமைத்து தருகிறேன். ஒரு வீட்டிற்கு, 'ஆர்கானிக்' முறையில் தோட்டம் அமைத்து கொடுத்தால், 4,000 ரூபாய் கிடைக்கும். விதை, உரம், 'கிரீன் ஹவுஸ் நெட்' என, அதில் பாதி பணம் தான் செலவாகும். மீதி பணத்தை என் படிப்பு செலவிற்கு போக, பெற்றோருக்கும் கொடுத்து உதவுகிறேன்.

'ஒருமுறை தோட்டம் அமைத்து கொடுத்த வீட்டுக்கு, இலவசமாக, 'மெயின்டனன்ஸ்' செய்து கொடுப்பேன். மேலும், அந்த வீடுகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கவும் சொல்லி கொடுப்பேன். இதனால், வாடிக்கையாளர் வட்டம் கூடிக்கிட்டே இருக்கு...' என்றான்.

நண்பர் மகனின், பசுமையான பிசினஸ் ஐடியாவை, மனதார பாராட்டி விட்டு வந்தேன்.

 
என். குர்ஷித், 



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories



கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."