எது வளர்ச்சி?
எது வளர்ச்சி?
கல்லுாரி படிப்பை முடித்ததும் விளையாட்டு திறமைக்காக பிரபல நிறுவனம் வேலை தந்தது. இதனால், குள்ளமானவர்களை கேலி, கிண்டல் செய்வான்; அலட்சியப்படுத்துவான். எதிர்த்தால் தாக்குவான்; அராஜகம் செய்து வந்தான் ராஜ்.
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இறுதி சுற்று அறிவிக்கப்பட்டது; அதில் சிறப்பாக விளையாடினால், உலக போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வரும்.
"யோவ்... நெட்டை பனைமரமே, டிக்கெட் வாங்கிட்டு உள்ள போயா..." என சிடு சிடுத்தார் நடத்துனர்.
உயரம் காரணமாக ஐன்னல் வழியாக எட்டி பார்க்க முடியவில்லை. எந்த இடத்தில், பேருந்து செல்கிறது என்பதை அறிய இயலாமல் தவித்தான்.
கூறியதும், "ஓ... கவலைப்படாதீங்க... உதவுகிறேன்..." என கூறினார்.
இறங்கும் இடம் வந்தது. நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தக் கூறி உதவினார் குள்ள மனிதர். நன்றி சொல்லி இறங்கினான் ராஜ்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றான். குள்ள மனிதர் உதவியால் தான், நேரத்துக்கு சென்று வெற்றி பெற முடிந்தது என்பதை உணர்ந்தான்.
தளிர்களே... ஆளும் வளரணும்; அறிவு வளரணும் அதுதான் வளர்ச்சி. இந்த உண்மையை புரிந்து செயல்படுங்கள்.

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."