sirukathaigal

மோசடியில் இது புதுவிதம்!

உறவினர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இது:

ஒருநாள், அவருடைய வீட்டிற்கு ஒருவர் வந்து, 'சார், ரமேஷ் இருக்காரா...' என்று கேட்டிருக்கிறார். 

அவரும், 'ரமேஷ் என் மகன் தான்... என்று கூறி, தன் மகனை அழைத்துள்ளார். வந்த நபர், ஒரு பர்சை எடுத்துக் காட்டி, 'இது, உங்க பர்சா...' என்று கேட்டிருக்கிறார்.

அவர் மகனும், ஆமாம்... இது, என் பர்ஸ் தான். காலையில் எங்கேயோ தவற விட்டுட்டேன்...'  என்று கூறி, அதை வாங்கி பரிசோதித்ததில், எதுவும் திருட்டு போகவில்லை என்று மகிழ்ந்திருக்கிறார்.

வந்த நபர், சென்னையிலிருந்து அவருடைய தங்கை வீட்டிற்கு வந்த போது, அந்த பர்சை வீதியில் கண்டெடுத்ததாகவும், அதிலிருந்த முகவரியை பார்த்து
வந்ததாகவும் அவரை கூறியிருக்கிறார்.

உறவினர் குடும்பத்தினர், நன்றியுடன் வழியனுப்பி வைத்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு, அதே நபர், ஒருநாள் இரவு, 8:00 மணிக்கு, என் உறவினர் வீட்டிற்கு வந்து, 'என் தங்கை வீட்டிற்கு  வந்தேன். ஆனால், அவர்கள் குடும்பத்தோடு திருச்சி சென்றிருக்கும் தகவல் கிடைத்தது. காலையில் வந்து விடுவர். ஐ.டி., புரூப் எடுத்து வராததால், லாட்ஜில் தங்க முடியவில்லை..." என்று கூறி, நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார். 

விடிகாலையிலே எழுந்து கிளம்பி விட்டிருக்கிறார். அதன் பின்னரே, வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள், தாலி செயின்கள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ந்துள்ளனர்.

மேலும், அவன் கொண்டு கொடுத்த பர்சும், அவனே திருடி. நல்லவன் போல் திருப்பிக் கொடுத்து. நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறான். அதை வைத்து, 'லம்ப்'பாக அடித்துச் சென்றதையும் அறிந்து. நொந்து போயுள்ளனர்.

மோசடியில் இது புதுவிதம். மக்களே... உஷாராக இருங்கள்!
ஆ. தேவதாஸ், 

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."