சீரியலால் நேர்ந்த விபரிதம்!
சமீபத்தில், நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒரே பையன், பிளஸ் 2 படிக்கிறான். அவன், தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். கையை அடிக்கடி முறுக்கி கொண்டும். சட்டை பட்டனை திருகிக் கொண்டும் பேசினாள். அதுமட்டுமல்ல, பொய் பேசுவது போல, தலையை கோதிக் கொண்டு பேசினான்; படபடப்பாகவும் இருந்தான்.
நண்பரிடம், 'நல்ல டாக்டர்கிட்ட காட்டக் கூடாதா...' என்றேன்.
'நீ வேறப்பா... 'டிவி' சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றை தினமும் பார்க்கிறான். அதில், நடிக்கும் கதாநாயகன் திக்கித் திக்கி பயந்தபடி, பொய் பேசுகிறான்.
அதைப் பார்த்த இவனும், இப்படி செய்ய ஆரம்பித்து விட்டான். இவன் பொய்யே பேசுவதில்லை. உண்மையையே பொய் மாதிரி, அந்த கதாநாயகன் போல பேசுகிறான். அந்த, 'மேனரிசம்' இவனுக்கு பிடித்து போனதால், அப்படியே செய்கிறான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் திருந்த வில்லை. என்ன செய்வது...' என, வருத்தப்பட்டார்.
மருந்து இல்லாத வியாதிக்கு ஒரு என்ன செய்வது ?
பெற்றோர்களே... நீங்கள் மட்டும் சீரியல் பாருங்கள்; சின்ன குழந்தைகளை பார்க்க விடாதீர்கள்!
ஆர். சேஷாத்ரி,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."