sirukathaigal

நினைவு நாள்

நினைவு நாள்-ninaivu naal

நினைவு நாள்  

  மீனாட்சிபுரம்,

    அனாதை இல்லம் , முதியோர் இல்லம், மருத்துவமனை, தெருவோர பிச்சை எடுக்கும் நபர்கள் என்று அனைவருக்கும் உண்ண உணவு , உடுத்த உடை என்று தடபுடலாக செலவு செய்து மக்களை மகிழ்வித்து கொண்டு இருந்தான் , செந்தாமரை.

போஸ்டர் , பேனர் என்று செந்தாமரை வணக்கம் வைப்பது போல் படம் , தாய் தந்தையின் நினைவு நாள் , ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் தினம் , என்று விளம்பர போர்டு அங்கங்கே தெரிந்தது.

அதனை பார்த்து கொண்டு அப்போது வந்த பஸ்ஸில் இருந்து இறங்கி ஊருக்கு புதிதாக வந்திருந்த சின்னமணி ,

“என்ன நண்பா , உங்க ஊர்ல இவ்வளோ நல்லது பண்ற நபர் யாருப்பா? என்ன விசேசம் ?” என்று இந்த ஊர்கார நண்பர் மாரிமுத்துவிடம் விசாரித்தான்.

“அதாவது , சின்னமணி , செந்தாமரை இந்த ஊர்ல பெரிய தலைக்கட்டு. அவங்க அப்பா அம்மாவுக்கு நினைவு நாளன்று வருசத்திற்கு ஒரு நாள் , இப்படி விளம்பரம் செய்து பேர் வாங்க செய்யும் வேலை தான் இது” என்று மாரிமுத்து கூறினான்.

“என்ன ? மாரிமுத்து சொல்ற, இத்தனை பேருக்கு சாப்பாடு , டிரஸ் என்று தடபுடலாக , செலவு செய்றாரு , அத போய் விளம்பரம் பண்றாருன்னு சொல்ற.?” என்று ஆச்சரியமாக சின்னமணி கேட்டான்.

“வெளில இருந்து பார்க்கிற எல்லாரும் இப்படி தான் நெனைப்பாங்க. அது அப்படி தான் தெரியும். இது உலக நியதி“ என்று சலிப்பாக கூறினான் மாரிமுத்து.

“இதெல்லாம் உண்மை தான , மாரிமுத்து ? அப்பா அம்மா இறந்த பிறகு அவங்க நினைவு நாளுக்கு இப்படி மற்றவர்கள் வயிறு குளிரும்படி செய்வது பெரிய விஷயம் தானே! இப்ப இருக்கிற காலத்தில் யார் இப்படி பண்றாங்க , ரொம்ப குறைவு. உங்க ஊர் தலைக்கட்டு செந்தாமரையை பாராட்டியே ஆகணும் “ என்று சின்னமணி கூறினான்.

“உன் பாராட்டு எல்லாம் அப்புறம் வச்சிக்கோ. வா வீட்டுக்கு போய் சாப்பிட்டு அப்புறம் பேசுவோம் “ என்று தன் நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றான் , மாரிமுத்து.

இருந்தாலும் சின்னமணி விடுவதாக இல்லை , “ இல்ல , மாரி நாம இங்க அன்னதானத்தில் சாப்பிட்டு போயிருவோம்.” என்றான். மாரிமுத்து முறைத்து பார்த்தான்.

“உனக்கு புரியும் படி சொல்லனும்னா, இருக்கும் போது சோறு போடனும் , இறந்த பிறகு ஊருக்கே சோறு போட்டு என்ன பயன் ?” என்று நாசுக்காய் நகைத்தான் மாரிமுத்து.

“ஓ , செந்தாமரை , அந்த லிஸ்டா , ஓகே, ஓகே அவன பெத்தவங்க உயிருடன் இருக்கும் போது கவனிக்காம , அவங்க இறந்த பிறகு ஊருக்கே சோறு போட்டு விளம்பரம் செய்ற ரகம். இப்போ புரிது. “ என்று புரிந்து கொண்டான் சின்னமணி.

“அவங்க அப்பா – அம்மா கடைசி காலத்தில் , சோத்துக்கு இவன்ட , இவன் பொண்டாட்டிட்ட அவ்ளோ பேச்சு வாங்கி , அந்த சோத்தை சாப்பிடறதுக்குள்ள ரொம்ப கஷ்ட பட்ட கதை ஊருக்கே தெரியும் , இருந்தாலும் ஊருக்கு முக்கிய தலைக்கட்டு என்பதால் எதுவும் சொல்ல முடியாமல் , நம்ம ஊர்காரங்களும் இருக்காங்க. அதனால இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் கடந்து போயிருவோம்” என்று மாரிமுத்து , தன் நண்பன் சின்னமணியிடம் கூறினான்.

“கண்டிப்பா , இப்படி பட்ட வீண் விளம்பரம் தேவையா , இப்படி தான் நெறைய பேர் நம்ம நாட்டில சுத்தி கிட்டு இருக்காங்க. பெத்தவங்கள , கடைசி வர நல்லா பார்த்துகிட்டா , நம்ம குடும்பம் நல்லா வரும். வயசான காலத்தில் அவங்களுக்கு ஒரு ஆதரவு தேவை , அத குடுக்கிறது தான் பிள்ளைகளோட கடமை.” என்று பேசிய படி இருவரும் நகர்ந்து சென்றனர்.

# பெற்றவர்களை வயதான காலத்தில் நல்ல முறையில் கவனிக்க வேண்டும் என்பது பிள்ளைகளின் கடமை மட்டும் அல்ல அது அவர்களின் உரிமை.

# பெற்றவர்களின் சொத்து மட்டும் நமக்கு தேவை , அவர்கள் தேவை இல்லை என்கிற இன்றைய சூழ்நிலை பிள்ளைகள்.

# பெற்றவர்களே நம்முடைய சொத்து என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் , அவர்களை இழந்த பிறகு வருந்துவதினால் எந்த ஒரு பலனும் இல்லை.

பெற்றோர்கள் ஒரு போதும் தன் பிள்ளைகளுக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள்.

முற்றும்.

கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்


                                                                                                                   சிறுகதை : மணிராம் கார்த்திக்  

காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

இந்த கதை என் சொந்த கற்பனை கதை , என்பதை உறுதி அளிக்கிறேன்



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."