விபரீதமான ஆர்வக் கோளாறு !
விபரீதமான ஆர்வக் கோளாறு !
சமீபத்தில், உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். திருமணம் நடந்த மண்டபத்தில், பலர் கூடியிருந்தனர். மணமகன், திருமாங்கல்யம் கட்டும் நேரத்தில், மணமகனின் நண்பர்கள் ஆர்வக் கோளாறில் கலர் பேப்பர் துண்டுகள் கொட்டும் பட்டாசு மற்றும் ரசாயனத்தால் தயாரித்த, கலர் புகை வரும் பட்டாசுகளை வெடித்தனர். இதனால், மண்டபம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்ததால், புகை வெளியே செல்ல முடியாமல், அங்கேயே சுற்றியது. பெண்கள், குழந்தைகள், வயதானோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட உடனே, அனைவரும் மண்டபத்தை விட்டு, வெளியேறி விட்டனர்.
என் தமிழ்
சொந்தங்களே... இது போன்ற மங்களகரமான நிகழ்ச்சியில் ரசாயனம் கலந்த கலர் புகை வெடிகளை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். ரசாயனம் கலந்த புகை நம் உடல்நலத்தை பாதிக்கும். மங்கள நிகழ்ச்சியின் போது, அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கலாமே!
த.முருகேசன்,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."