இப்படியும் ஒரு திருட்டு!
இப்படியும் ஒரு திருட்டு!
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, வேதனையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அது...
'என் மனைவிக்கு, 'ஹார்ட் அட்டாக்' வர, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். சிகிச்சை பலனளிக்காமல் அவள் உயிரிழந்தாள்.
உடலை, வெள்ளைத் துணியில் சுற்றி தந்தது, மருத்துவமனை நிர்வாகம். 'வீட்டில், 'பார்மாலிட்டி'க்காக சேலை கட்டுவதற்கு, அவள் உடலிலிருந்த, 'காடா' துணியை அகற்றியபோது, தலையில் இருந்த அடர்த்தியான தலைமுடி முழுவதும் வெட்டப்பட்டு இருந்தது.
'மருத்துவமனையில் யாரோ அதை வெட்டி எடுத்திருக்கின்றனர்...' என்றார் நண்பர், கண்ணீர் மல்க.
'ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்தவரின் தலைமுடி வெட்ட வேண்டிய அவசியம் இல்லையே... அவர்களிடம் சென்று கேட்கவில்லையா?' என்றேன்.
அதற்கு, 'மனைவியை இழந்த துக்கத்தில், மருத்துவமனை நிர்வாகத்திடம் வாதாடும் தைரியமோ, பணமோ இல்லை. சிகிச்சைக்கு முன் பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர். அதில், இதற்கும் அனுமதி எழுதி வைத்தார்களோ என்னவோ, தெரியவில்லை.
'மனைவியின் தலைமுடியை திருடி விட்டனர் என்பது மட்டும் நிச்சயம்...' என்றார்.
அவரது வார்த்தைகள் மனதை உருக்கின. நுாறு கிராம் முடி,300 ரூபாய் வரை, விற்பனையாவதால், மரணமடைந்தவரிடமிருந்து கூட சுரண்ட ஆரம்பித்து விட்டனர்.
அறிவு, விழிப்பு, துணிவு இவையே இனி நம்மை காப்பாற்றும் ஒரே மருந்து கவனம் மக்களே!
மகேஷ் அப்பாசாமி,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."