சந்தோஷ வாழ்வு!
சந்தோஷ வாழ்வு!
மனைவியை இழந்த என் நண்பர், மருமகளுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறார். 70 வயதுக்கு மேல் அமைதியாக, சந்தோஷமாக வாழ்வது எப்படி என்பதை, கடந்த ஒரு வாரத்தில் அவர் மூலம் கற்றுக் கொண்டேன்.
காலை, 6:00 மணிக்கு எழுந்து, மொபைல் போனில், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டவாறு, ‘வாக்கிங்' சென்று, வீட்டிற்கு தேவையான பால் வாங்கி வருவார்.
மருமகள் துாங்கி எழ தாமதமானால், பால் காய்ச்சி காபி குடிப்பார். 8:30க்கு குளித்து, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, வரும் வழியில் உள்ள கடையில், இட்லி சாப்பிட்டு, வீட்டிற்கு தேவையான காய்கறி, கீரையை வாங்கி வருவார்.
பின், மருமகளுக்கு துணையாக காய்கறி நறுக்கி கொடுத்து, பேப்பர் படிப்பார். அதன்பின், வார இதழ்களுக்கு துணுக்கு, கட்டுரை எழுதி, 11:00 மணிக்கு தபாலில் அனுப்பிய பின், மதியம் சாப்பிட்டு குட்டி தூக்கம் போடுவார்.
இரவு, 7:00 மணிக்கு, அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு, 'தினம் ஒரு திருக்குறள்' சொல்லி, விளக்கவுரை வகுப்பு நடத்துவார். 'டிவி' சீரியல்களை பார்க்க மாட்டார். சொற்பொழிவு, பஜனை என்றால் தவறாமல் போவார். அவரை பார்த்து, பணி ஓய்வுபெற்ற நானும், அவைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன்.
எம்.டி. கிருஷ்ணன்,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."