கஷ்டம் கஷ்டம்..." என, புலம்புறிங்களா?
கஷ்டம் கஷ்டம்..." என, புலம்புறிங்களா?
எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிள்ளைகள் இருவருக்கு, சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்துக் கொண்டிருந்தார், புது நபர் ஒருவர்.
அவரிடம், 'இந்த பிள்ளைகள் உங்கள் உறவுக்காரர்களா?' என, கேட்டேன்.
'இல்லை, நான் பள்ளி ஒன்றில், விளையாட்டு ஆசிரியராக இருக்கிறேன். இவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். 'எங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது. அப்பா, அம்மா வேலைக்கு செல்வதால், எப்போதும், 'பிசி'யாக உள்ளனர்; எங்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்று தரவில்லை...' என கூறி, வருந்தினர்.
'உங்கள் பெற்றோர் சம்மதித்தால், விடுமுறையில், வீட்டிற்கு வந்து சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாக கூறினேன். அதன்படி, குழந்தைகள்," பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வந்தனர்.
'தற்போது, இவர்கள் மட்டுமின்றி, வேறு சில குழந்தைகளுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் வீடுகளுக்கே சென்று, சைக்கிள் ஓட்ட கற்றுத் தந்து, சிறு தொகையை கட்டணமாக பெற்றுக் கொள்கிறேன்.
'தனியார் பள்ளியில் தரும் குறைவான சம்பளம், குடும்பத்தை நடத்த கஷ்டமாக இருந்தது. இது போன்று சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதால் கிடைக்கும் கூடுதல் வருமானம் போதுமானதாக உள்ளது...’ என்றார்.
கவுரவம் பார்க்காமல் செய்யும், அவரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினேன். ‘கஷ்டம் கஷ்டம்...' என புலம்புபவர்கள், கவுரவத்தை துாக்கி வீசி, இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக வாழலாமே!
- எம்.மொவன் குட்டி,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."