பணம் பத்தும் செய்யும்...
![]() |
| பணம் பத்தும் செய்யும்... |
பணம் பத்தும் செய்யும்...
சுந்தராபுரம்,
அண்ணன் தங்கை பாசத்திற்கு கதிரும், சுந்தரியும் இங்கு பேர் போனவர்கள்.
தாய் தந்தையை சிறு வயதில் இழந்துவிட்டு அண்ணன் கதிரின் வளர்ப்பில் , பாட்டி மீனாட்சியின் அரவணைப்பில் வளர்ந்தவள் சுந்தரி.
சிறு வயது முதல் தன் தங்கைக்காக கதிர் கஷ்டப்பட்டு உழைத்து , அவளை சந்தோசமாக பார்த்து கொள்வான்.
சுந்தரியை நன்கு படித்து வைத்தான். தனக்கென்று எதையும் யோசிக்காமல் , தன் தங்கையின் மகிழ்ச்சியை மட்டுமே லட்சியமாக இருந்தான் கதிர்.
ஊரெல்லாம் ஒரே பேச்சு , “கதிரு உனக்கென்னு ஏதாவது சேர்த்து வை , உன் தங்கச்சிய கட்டி கொடுத்த பிறகு உனக்கு அதுதான் உதவும்” என்று. இந்த பேச்சை பாட்டி மீனாட்சி கூறியும் , கதிர் கேக்கவில்லை.
என் தங்கை சுந்தரி தான் என் உலகம். என்று பட வசனம் பேசி சமாளித்துவிடுவான் கதிர்.
தங்கை சுந்தரிக்கு அவளுக்கு பிடித்த பையனை பார்த்து சிறப்பாக கல்யாணம் முடித்து வைத்தான் கதிர்.
நல்ல முறையில் தங்கையின் திருமண வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள், தங்கை சுந்தரி கண்கலங்கிய படி வீட்டிற்கு வந்தாள்.
என்ன பிரச்னை என்று விசாரித்ததில் , சுந்தரியின் கணவர் பணத்தை தொழில் முதலீடு என்று கூறி பணத்தை முழுதுமாக இழந்து விட்டார் , மேற்கொண்டு கடன் அதிகமாக உள்ளது , தாங்கள் வாழ வழி இல்லை என்று கண் கலங்கியபடி கூறினாள்.
உடனே கதிர் , தங்கையின் மனதை தேற்றி விட்டு , தன் வீட்டை வித்து பணம் கொடுத்தான்.
அந்த பணத்தின் மூலம் ஒரு பங்கு கடனை மட்டும் தான் அடைக்க முடியும் என்றதும் , என்ன பண்ணுவது என்று தெரியாமல் வெளியில் இதுவரை கடன் வாங்காத கதிர் மேலும் கடன் வாங்கி கொடுத்தான்.
அப்போதும் கடன் தீரவில்லை. தங்கையின் அழுகை ஓயவில்லை.
கதிர் தன்னால் முடிந்த வரை பணத்தை கொடுத்தான். மேலும் பணம் பிரட்ட அவனால் முடியவில்லை.
ஏதோ அதிர்ஷ்டம் , தங்கையின் கணவருக்கு பணம் திரும்ப தொழிலில் கிடைக்க ஆரம்பித்தது.
மீண்டும் நல்ல நிலைக்கு வந்தனர் தங்கையின் குடும்பம்.
ஆனால் அண்ணன் கதிர் நிலை அப்படியில்லை , கடனால் ரொம்ப நொந்து போயிருந்தான்.
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே ரொம்ப நொந்து போய்விட்டான்.
தங்கை நல்ல நிலைமைக்கு வந்தும் , தனக்கு எதுவும் உதவி செய்யவில்லை என்று எண்ணம் அவனிடம் இல்லை , ஆனால் பாட்டி மீனாட்சி கூறி கொண்டு தான் இருந்தாள்.
தங்கை வீட்டுக்கு வருவதை குறைத்து கொண்டாள்.
கடன் அதிகமான காரணத்தினால் கதிருக்கு பொண்ணு கொடுக்க யாரும் ஒப்பு கொள்ளவில்லை.
கதிருக்கு திருமணம் நடக்காததை நினைத்து பாட்டி மீனாட்சி மனம் உடைந்து இறந்து விட்டாள்.
மீனாட்சி பாட்டி இறப்புக்கு தங்கை சுந்தரி தன் கணவருடன் வந்து தான் செய்ய வேண்டிய செய்முறையை மட்டும் செய்து அங்கிருந்து புறப்பட்டாள்.
ஈம சடங்கு செய்வதற்கு கூட வழி இல்லாமல் கதிர் இருந்தான்.
கதிரிடம் பேசாமல் புறப்பட்டாள் புது பணக்காரி சுந்தரி.
பேச்சு கொடுத்தால் , ஈம சடங்கு செலவுகளை அல்லது கடனை தன் தலையில் கட்டிவிடுவனோ என்ற பயத்தில் கணவரின் பேச்சை கேட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சுந்தரி.
தற்போது தான் கடன் என்ற ஆபத்தில் இருந்து வெளியில் வந்து , நல்ல நிலைமையில் இருக்கிறோம். கதிரிடம் பேச்சு கொடுத்து மீண்டும் பிரச்னை நமக்கு வந்து விடும் என்று கணவரின் எண்ணத்திற்க்கு செவி சாய்த்து சுந்தரி புறப்பட்டாள்.
மீனாட்சி பாட்டியை பார்த்து கண்களில் கண்ணீருடன் , சிரித்தபடி , உன் பேச்சை நான் கேக்கல. இப்போ உன்னை அடக்கம் பண்ண பணம் இல்லாமல் வக்கத்து போய் நிக்கிறேன் என்றான் கதிர்.
என் தங்கச்சி அப்படி பண்ண மாட்டா என்று நினைத்தேன். ஆனால் பணம் பத்தும் செய்யும் என்பதை அவள் நிருபித்து விட்டாள்.
பணம் பத்தும் செய்யும் , என்கிட்ட இருந்தா பதினொன்றையும் செய்ய வைப்பேன் என்று கூறுவார்கள் இது உண்மையான வார்த்தைகள்.
பணம் மட்டும் தான் ஒரு மனிதனின் மரியாதையை பெற்று தருகிறது இன்றைய உலகில்.
காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."