கவிஞன் போக்கு
கவிஞன் போக்கு
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத் தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி செல்கையில் அதனுள்ளி ருந்த வேதாளம் எள்ளி நகைத்து மன்னனே! இந்த பயங்கர நள்ளிரவில் இங்கு ஏதோ சபதமோ அல்லது விரதமோ மேற் கொண்டவன் போல முழுமூச் சுடன் இந்த வேலையில் ஈடுபட்டி ருக்கிறாயே. சில சமயங்களில் இவற்றை நிறைவேற்ற முடியாமல் போவதும் உண்டு. இதற்கு உதாரணம் கவிஞனான் இந்துசேகரன். அவன்தான் பணத்திற்காக கவிதை புனைவதில்லை எனக் கூறி பலரையும் கேலி செய்து கவிதை எழுதினான். ஆனாலும் அவன் பணத்திற்கு அடிமையாகிக் கவிதை எழுதினான். அவன் கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.
காஞ்சனபுரத்தைக் காந்திவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் எங்கு போனாலும் தான் மன்னன் என கர்வம் கொள்ளாமல் சகஜமாக எல்லோருடனும் பழகுவான். அவனுக்குக் கோபமே வராது. அவன் பொறுமைசாலி என்று பெயர் பெற்று விட்டான்
அந்நாட்டில் இந்துசேகரன் என்ற கவிஞன் இருந்தான். அவன் சாதுரியமாய்க் கவிதை புனைபவன் என்று பெயர் பெற்றிருந்தான். அவன் தன் கவிதைகளால் பலரையும் கேலி செய்து எழுதியதால் மக்கள் அவற்றை விரும்பிக் கேட்கலாயினர்.
ஒருமுறை சமஸ்தானக் கவிஞர் கலாதாசர் இந்துசேகரன் இருந்த ஊருக்கு வந்தார். அங்கு அவரை தனசேகரன் என்ற பணக்காரன் வரவேற்று மரியாதை செய்தான். பேச்சுவாக்கில் தனசேகரன் இந்து சேகரனைப் புகழ்ந்து கூறவே கலாதாசர் இந்துசேகரனைக் காணச் சென்றார். அவர் தம்மை இன்னார் என அறிமுகம் செய்து கொண்டு அவனது கவிதைகளைக் கேட்க விரும்புவதாகக் கூறினார்.
இந்துசேகரனோ "நீங்கள் தன சேகரன் சொன்னதை அப்படியே நம்பி விட்டீர்களா? அவனது பரம விரோதியான மாணிக்கவர்மனைக் கேலி செய்து கவிதை கூறினேன். அதுகேட்டு கூடி இருந்தோர் கை தட்டினார்கள். அதனால் தனசேகரன் என்னைப் பாராட்டுகிறான். அவனைக் கேலி செய்து நான் கவிதை கூறினால் அவன் இதே அபிப்பிராயத்தைத் தெரிவிப்பானா என்பது சந்தேகம்தான்" என்றான்.
அப்போது கலாதாசர் "நீங்கள் தனசேகரனைப் புகழ்ந்து எழுதிய கவிதைகளைப் படித்தேன். அதிலிருந்து நீங்கள் அவன் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது" நீங்கள் இதுபோல இந்நாட்டு மன்னரையும் புகழ்ந்து எழுதி நிறையப் பணம் சம்பாதித்து சுகமாக வாழலாமே" என்றார். அதற்கு அவன் "நான் உயர்ந்த மன்னரான காந்திவர் மரை என் கவிதைகளைக் கூறி தாழ்த்த விரும்பவில்லை" என் றான்.
இந்துசேகரனும் 'அரசே! தங்களை என் கவிதைகளால் மகிழ்விக்கிறேன். ஆனால் ஒரு வேண்டு கோள். நான் எழுதும் கவிதைகளை முதலில் நீங்கள் மட்டுமே கேட்க வேண்டும். அதற்குப் பிறகே தர்பாரில் பிறர் கேட்க அவற்றை நான் கூறுவேன்" என்றான்.மன்னனோ அப்படி வேண் டாம். சபையோரில் ஒருவனாக நானும் இருந்து முதல் தடவையாக உன் கவிதைகளைக் கேட்பதில் ஆனந்தம் ஏற்படும்" என்றான். அதற்கு இந்துசேகரன் இணங் காது போகவே மன்னன் அவனது வேண்டுகோளை ஏற்றான்.
ஒருநாள் இந்துசேகரன் மன்னனிடம் "அரசே! உங்களது சமையல்காரனுக்கு ஒரு சமையல்காரன் இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் உங்கள் சமை யல்காரன் செய்வதை எல்லாம் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் ருசியாக இருக்கிறது என்று நீங்கள் சாப்பிட்டு விடுகிறீர்கள். மேலும் அரச காரியங்களில் மூழ்கி இருப்பதால் தாங்கள் உணவின் ருசி பற்றிக் கூடக் கவலைப்படுவ தில்லை. அதனால் தங்கள் சமையல்காரன் தான் ருசியாக உண்ண ஒரு சமையல்காரனை வைத்துக் கொண்டிருக்கிறான்" என்று பொருள்படக் கவிதை கூறினான்.
அதைக்கேட்ட மன்னன் விழுந்து விழுந்து சிரித்தான். அதன் பிறகு அக்கவிதை தர்பாரில் படிக்கப் பட சபையோரும் ரசித்தனர். காந்திவர்மனுக்கு நான்கு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் நால்வரும் அவனது நம்பிக்கைக் குப் பாத்திரமானவர்கள். மன்னன் அவர்களைக் கலக்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டான். அந்த நால்வரில் முக்கியமானவர் வீர சேனன். அவர் மன்னரைத் தான் சொல்வதை எல்லாம் கேட்க வைத்து நடக்க வைக்கிறார் என்பது பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இந்துசேகரன் அவரைப் பற்றி கவிதை புனைந்து மன்னனுக்குப் படித்துக் காட்டினான். ‘அரசர் விரும்பாத ஒரு செயலை வீரசேனர் சொல்லி செய்ய வைத்தார். அத னால் மன்னர் மிக நல்ல பலன் களையே அடைந்தார். அதனால் மன்னர் மகிழ்ந்து அவருக்குத் தங் கக் கடயம் ஒன்றை பரிசளித்தார். ஆனால் வீரசேனர் அது தனக்கு வேண்டாம் எனக் கூறி அதை விடச் சிறிய கடயமாகக் கொடுக்க வேண்டினார். மன்னரோ எல்லோ ரும் பெரிதாகக் கேட்பார்கள். நீங் கள் சிறிதாக வேண்டும் என்கிறீர் கள். என்ன காரணம். என்று கேட்டார்.
அமைச்சரும் “அது என் மனை விக்கு அணிவிக்கத்தான்” எனவே மன்னனும் அதை நீங்களே செய்து போட்டு விடலாமே என்றார். அதற்கு அமைச்சர் நான் தங்களுக் குக் கூறிய யோசனை என் மனைவி என்னிடம் கூறியதே. அதனால் இந்தக் கடயம் அவளுக்கே சேர வேண்டும்" என்றார்.
இந்தக் கருத்துள்ள கவிதை யைக் கூறியதும் மன்னன் "ஓகோ! வீரசேனர் தம் மனைவி கிழித்த கோட்டைத் தாண்டாதவர் என்று எல்லோரும் சொல்வதைக் கவிதை வடிவில் கொடுத்து விட்டீர்களே' என்று கூறி பலமாகச் சிரித்தான்.
காந்திவர்மனின் மற்றொரு மந் திரி பலசேனன். அவன் இராணு வத் துறையை கவனித்து வந் தான். அவன் பேசினாலே கிடுகிடு என்று நடுங்குவார்கள். ஆனால் அவனோ குச்சி போல மெலிந்து இருப்பான். எனவே இந்துசேகரன் அவனைப் பற்றிய கவிதையில் 'அரசரின் கருணைதான் என்னே! பலமற்றவர்களைப்
பாதுகாக்க வீரர்களை அனுப்புகிறார். நம் பல சேனருக்கும் வீரர்களைக் கொடுத் திருக்கிறார்" என்று எழுதிப் படித் தான்.
மன்னன் அக்கவிதையை வெகு வாக ரசித்தான். மூன்றாவது மந்திரி நாகசேனன் இளகிய மனம் கொண்டவன். யாராவது கஷ்டப் படுவதைக் கண்டால் அவன் கண் களில் கண்ணீர் வடிப்பான். நாக சேனனுக்கு ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை.
இந்துசேகரன் நாகசேனனைப் பற்றி ஒரு கவிதை எழுதினான். ஒருமுறை நான் நாகசேனனின் வீட்டிற்குப் போனேன். அப் போது அவர் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். என்னைக் கண்ட அவரது மனைவி நீங்கள் தப் பாக நினைக்காதீர்கள். எனக்குப் பிள்ளை இல்லாத துயரைப்போக்க இப்படியெல்லாம் செய்கிறார்"என்றாள். " அக்கவிதையைக் கேட்ட மன்னன் வெகுநேரம்வரை சிரித் தான்.
நான்காவது அமைச்சர் ஜகவீரன் இளைஞன். மன்னனுக்கு அவன் தேவையே இல்லைதான். ஆனாலும் ஏதோ பாசம் காரண மாக மன்னன் அவனை அப்பதவி உயில் வைத்திருந்தான். ஏனெனில் சில வருடங்களுக்கு முன் அவன் மன்னனை பாம்பு கடிக்காமல் காப்பாற்றினான். பாம்பு ஜக வீரனைத் தீண்டியது. விஷம் பரவு முன் மன்னன் அவனுக்கு சிகிச்சை செய்ய வைத்துக் காப்பாற்றிப் பதவியையும் அவன் கேட்டதன் பேரில் அளித்தான்.
மன்னனோ "இத்தகைய கவி தைகளை சபையில் நீ கூறினால் உனக்குக் கெட்டபெயர்தான் வரும். ஜகவீரனின் மனம் வருந் தும். நீ ஏனோ ஜகவீரனை இப்படி அவமானப்படுத்த எண்ணி னாய். அவனைப் பற்றி வேறு ஒரு கவிதை எழுதிக் கொண்டு வா. அதைப் பார்க்கலாம்'' என்றான். இந்துசேகரன் பணிவுடன் 'அரசே! தாங்கள் என்னை மட்ட மானவன் என்று கூறி விட்டீர்கள். அதனால் இனி நான் உங்களுக்கு என் கவிதைகளைப் படித்துக் காட்ட முடியாது. தாங்கள் விரும்பினால் தங்கள் மீது ஒரு காவியம் எழுதிக் கொடுத்துவிட்டு என் ஊருக்கு போய் விடுகிறேன்" என் றான்.
விக்கிரமனும் இந்துசேகரன் தன் போக்கில் கவிதை புனைபவன். மன்னன் அவனை வழைத்து அவனது கவிதைகளைச் சபையில் கூறி எல்லோரையும் மகிழ்விக்கச் சொன்னபோது இந்து சேகரன் மன்னன் அளித்த சுதந்தி ரத்தை அத்துமீறிப் பயன்படுத்தக் கூடாது என்று எண்ணியே முதலில் மன்னனுக்குப் படித்துக் காட்டிவிட்டே பிறகு சபையில் படிப்பதாக உறுதியுடன் கூறினான். எல்லோரையும் பற்றிக் கவிதை கள் புனைந்து கூறியபோது ரசித்த மன்னன் ஜகவீரனைப் பற்றி இந்து சேகரன் கூறிய கவிதை கேட்டு அவனை மட்டமானவன் என்று கூறினான். அதுவரை இந்துசேக ரன் மன்னனை பாரபட்சம் காட்டாதவன் என நினத்திருந்தான்.
ஆனால் தன் உயிரைக் காப்பாற் றிய அவனுக்கு மன்னன் பரிந்து கொண்டு வந்தான். அதுவரை தனக்கு பணமே கேளாத இந்து சேகரன் மன்னனுக்கும் விருப்பு வெறுப்பு இருப்பதால் என்றாவது ஒருநாள் அவன் வெறுப்படைய லாம் என்று நினைத்தே மன்னன் மீது காவியம் புனைந்து பரிசு களைப் பெற்றுக் கொண்டு தன் ஊருக்குப் போய் சுகமாக வாழ்ந் தான். எனவே அவன் மன்னனிடம் பயம் கொள்ளவில்லை, பணத்தாசையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது" என் றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் மரத்தில் ஏறிக் கொண்டது.





கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."