அதிசயமலர்
அதிசயமலர்
[மாணிக்கபுர மன்னன் தன் நாட்டை ராட்சஸ மிருகத்திடமிருந்து காக்க மலைச்சாதி மினரின் உதவியைக் கோர அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தன் மகளோடுசென்றான். மலைச் சாதியினர் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். அவர்களது தலைவன் சாம்பனும் உத்தமனும் அதிசய மலர்களைக் கடலில் போட்டு ராட்சஸ மிருகம் நாட்டினுள் வராமல் செய்வதாக வாக்களிக்கவே, மன்னனும் இளவரசியும் தலைநகருக்குத் திரும்பி வந்தார்கள். பிறகு]
மலைச் சாதியினர் மன்னன் தம் பகுதிக்கு விஜயம் செய்தது பற்றி மகிழ்ச்சி ததும்பப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம் இனத்து உத்தமன் அந்நாட்டு மன்னனுக்கே உதவப் போவது குறித்து அவர்கள் பெருமை கொண்டார்கள். உத்தமன் அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் வாழ்த்தியதோடு அவனுக்கு வெற்றி அளிக்கும் படித்தம் குலதேவதையையும் வேண்டிக் கொண்டார்கள். உத்தமனைக் கௌரவிக்க உடனே ஒரு விருந்திற்கும் ஏற்பாடு செய்தார்கள்.
விருந்து முடிந்ததும் உத்தமன் எப்படி ராட்சஸ மிருகத்தை அடக்க வேண்டும் என்பது பற்றி. எல்லோரும் யோசிக்கலானார்கள்.அவர்களது தலைவன் சாம்பன் எழுந்து "அதிசய மலர் பூத்துக் கிடக்கும் இடத்தை நம் உத்தமன் நன்கு அறிவான். அதனால் நாளைக் காலை அவன் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு போய் மலர்களை பறித்து ஓரிடத்தில் வைக்கட்டும்.
இரவில் ராட்சஸ மிருகம் வரக் கூடிய அபாயம் இருப்பதால் சூரியன் மேற்கே மறைவதற்குள் மலர்களைப் சேகரித்து விடவேண்டும். மலர்களை பத்திரப்படுத்தி விட்டு எல்லோரும் இங்கு வந்து விடுங்கள். அந்த மலர்களைக் கடலுக்குள் கொண்டு போக ஒரு படகு வேண்டும். அதை நாமே தயார் செய்ய வேண்டும். இப்போது படகு வேறு எங்கும் கிடையாது என்றான்.
அப்போது இரு வாலிபர்கள் எழுந்து "நாங்கள் கடற்கரைப் பகுதியில் சிறிது காலம் இருந்திருக்கிறோம். எங்களுக்குப் படகு தயாரிக்கத் தெரியும். நாங்கள் இரண்டு நாட்களில் தயாரித்துக் கொடுத்து விடுகிறோம்" என்றார்கள். சாம்பனும் "சரி. நீங்கள் தயாரித்துக் கொடுங்கள். உத்தமன் மலர்களைச் சேகரித்து கட்டுகளாகக் கட்டி வைக்கட்டும். அவனுடன் நாளை செல்லயார் முன் வருகிறீர்கள்?'' என்று கேட்டான்.
பல மலைச் சாதி இளைஞர்கள் தாம் செல்வதாக முன் வந்தனர். ஆனால் உத்தமன் அவர்களில் ஆறு பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் போதும் என்றான். பிறகு அவன் சாம்பனையும் மற்றுமுள்ள பெரியவர்களையும் வணங்கி அவர்களது ஆசிகளைப் பெற்றான்.
சாம்பனும் அவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினான். உத்தமனும் புன்னகை புரிந்தவாறே தன் தங்கை ரஜனியுடன் தன் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள் விடியும் போது அவன் எழுந்து தன் ஆறு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அதிசய மலர்கள் இருக்கும் மலைப் பகுதிக்குச் சென்றான்.
அவர்கள் இரண்டு மணி நேரத்தில் அம்மலர்கள் இருக்கும் பகுதியை அடைந்தார்கள். யாவரும் அந்த மலர்களைக் கிளைகளை வளைத்தும் சில சமயங்களில் கைக் கோடலிகளால் வெட்டியும் சேகரிக்கலானார்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மலர்களைக் கட்டுகளாகக் கட்டினார்கள். இப்படியாக மாலையாவதற்குள் அங்குள்ள மலர்களை எல்லாம் பறித்துக் கட்டுகளாகக் கட்டி எடுத்துக் கொண்டார்கள். உத்தமன் அவற்றை பத்திரமாக வைக்க ஒரு பாறையின் கீழ் மரக்கிளைகளை வெட்டிப் போட்டான். அவற்றின் மீது மலர்க்கட்டுகள் வைக்கப்பட்டன.
சூரியன் மறைந்து இருட்டும் வேளைக்கு ஏழு பேர்களும் அங்கிருந்து கிளம்பி தம் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்ட சாம்பன் நீங்கள் மேற் கொண்ட வேலை வெற்றிகரமாக முடிந்ததா?" என்று கேட்டான். உத்தமனும் "எல்லாம் நல்லவிதமாகவே முடிந்தது" என்றான்.
சாம்பனும் 'சரி. நாளை மாலை படகு தயாராகி விடும். நாளை மறுநாள் காலையில் இங்கிருந்து கிளம்பலாம்" என்றான். இரண் டொரு நிமிடங்களுக்குப் பிறகு அவன் "உத்தமா! நீங்களெல்லாம் மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். போய்ப் படுத்து நன்றாகத் தூங்குங்கள். நான் வேறு சிலரை நம் பகுதியைக் காவல் காக்க அனுப்புகிறேன்'' என்றான்.
காலையான போது சில காவல் வீரர்கள் ஓடோடி வந்தார்கள். அவர்களைக் கண்ட சாம்பன் “ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்? என்ன விஷயம்?' என்று கேட்டான். அவர்களும் “நாங்கள் இருந்த பகுதியில் எதுவும் நடக்கவில்லையானா லும் வேறு எங்கோ ராட்சஸ மிருகம் வந்திருக்கிறது. ஏனெனில் எங்கோ மரங்கள் முறிந்து விழும் சத்தமும் பாறைகள் உருளும் சத்தமும் கேட்டன. பாதி ராத்திரிக்கு ஆரம்பித்த சத்தம் விடிவதற்குச் சற்று முன்தான் ஓய்ந்தது” என்றார்கள்.
சாம்பனும் அதைக் கேட்டு "சரி. நீங்கள் போகலாம்” என்று கூறவே அவர்களும் சென்று விட்டார்கள். மறுநாள் காலை உத்தமன் சாம்பனின் கட்டளைப்படி தன் நண்பர்கள் ஆறு பேர்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன்தினம் கட்டி வைத்த மலர்க் கட்டுகளை எடுத்து வந்தான். அவர்கள் வந்தபோது சாம்பன் படகுடன் தயாராக நின்று கொண் டிருந்தான். ரஜனியும் அவனருகே இருந்தாள். சாம்பன் அந்த மலர்க் கட்டுகளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவற்றின் நறுமணம் நாலா புறமும் பரவி எல்லோர் மனதையும் மகிழ வைத்தது.
மறுநாள் சூரியோதயத்திற்கு முன் சாம்பனும் உத்தமனும் தம் ஆட்களுடன் கிளம்பினார்கள். அவர்களோடு உத்தமனின் தங்கை ரஜனியும் சென்றாள். ஆட்களில் இருவர் படகைத் தம் தோள்களில் சுமந்து கொண்டு சென்றார்கள். அவர்களை வழியனுப்ப மலைச் சாதியினர் கொஞ்ச தூரம் சென் றனர்.
சூரியன் மறையும் போது கடற்கரையை அடைந்து விடவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது முடியாது என்று தெரிந்து அவர்கள் நடந்து நடந்து உச்சி வேளைக்கு பாதி தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியே போய்ச் சேர்ந்தார்கள். அங்கு சற்று வேக வேகமாக நடந்து மாலை ஆகும்போது கடற்கரையை அடைந்து விட்டார்கள்.
படகை எடுத்துக் கடலில் மிதக்க விட்டார்கள். மலர்க் கட்டுகள் அப்படகில் ஏற்றப்பட்டன. அதன் வாசனை எங்கும் பரவியது. உத்தமன் தன் தலைவனான சாம்பனின் கால்களில் விழுந்து வணங்கினான். சாம்பன் அவனை அன்புடன் தூக்கி நிறுத்தி "நீ நிச்சயமாக உன் முயற்சியில் வெற்றி பெறுவாய். நம் குலதேவதையின் பரிபூர்ண அருள் உனக்கு உண்டு” எனக்கூறி ஆசீர்வாதம் செய்தான்.
அப்போது அருகில் இருந்த ரஜனி அண்ணா! நீ விரைவிலேயே திரும்பி வந்து விடவேண்டும். உன்னை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்' என்று கூறி தான் கொண்டு வந்த உணவு மூட்டையைக் கொடுத்தாள். உத்த மனும் அதை வாங்கிக் கொண்டு 'இது எனக்கு வழியில் சாப்பிட உதவும்" என்று கூறினான்.
பிறகு அவன் தன் தங்கையிடம் "நீ அரண்மனைக்குப் போய் இளவரசியாருடன் தங்கி இரு. அவள் உன்னை நன்கு கவனித்துக் கொள்வாள். நானும் விரைவில் திரும்பி வந்து விடுவேன். இதை நீ இளவரசியிடமும் சொல்" என்றான்.
உத்தமன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான். பிறகு துடுப்பை எடுத்து வலிக்கலானான். படகு கடலில் தள்ளி விடப்பட்டது. அது ஆடி அசைந்தவாறே கடலில் சென்றது. கரையில் நின்றவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கை களை ஆட்டி உத்தமனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.
சாம்பனும் "சரி. இனி நாம் செல்லலாம்' என்று கூறவே மற்றவர்களும் அவன் பின்னால் சென்றனர். சாம்பன் ரஜனிக்கு ஆறுதல் கூறியவாறே தன்னோடு அழைத்துச் சென்றாள்.
எல்லோரும் தலைநகரை நோக்கி சென்றார்கள். வழியில் பாழடைந்து கிடந்த இடங்களைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். இரவாகிவிட்டால் அந்த ராட்சஸ மிருகம் வந்துவிடுமே எனப் பயந்து அப் பகுதியிலிருந்து விரைவில் போய் விட வேண்டுமென்று வேகமாக நடந்தார்கள். சற்று தூரம் போன தும் அடர்ந்த காடு ஒன்று வந்தது. அடர்ந்த மேகங்கள் சூழவே எங் கும் இருள் பரவியது. அதனால் யாவரும் அங்கேயே தங்கி இர வைக் கழித்தார்கள்.
சூரிய வெளிச்சம் வந்ததும் யாவரும் கண் விழித்து அங்கிருந்து தலைநகரை நோக்கிச் சென் றார்கள். அவர்கள் தலைநகரை அடைந்தபோது உச்சிப் பொழுதாகி விட்டது. அரண்மனையை அவர் கள் அடையவே வீரர்கள் உள்ளே போய் மன்னனிடம் அவர்கள் வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். மன்னனும் அவர்களை வரவேற்று அவர்கள் நாட்டிற்குச் செய்யும் அரும்பணியைப் பாராட்டினான்.






கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."