sirukathaigal

மன நிம்மதி

மன நிம்மதி 

 மன நிம்மதி 

மதுரை – காமராஜர் சாலையில் உள்ள கோவிலில்,

அன்றைய தினம்  சிறப்பு தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமி தரிசனத்திற்கு , நீண்ட வரிசை. மக்கள் சாமிக்கு பால் , தயிர் , நெய் , என்று அபிசேகம் செய்வதற்கு தங்களால் முடிந்த பொருளை வாங்கி வந்திருந்தனர்.

அப்போது பெரியவர் சுந்தரம் , அந்த வரிசையில் வந்து நின்றார். தள்ளாத வயதிலும் , சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

வரிசையில் சென்று சாமியை தரிசனம் செய்ய அரை மணிநேரத்திற்கு மேல் ஆகும் , இருப்பினும் வரிசையில் சென்று நின்றார் சுந்தரம்.

அந்த வரிசைக்கு வந்து ஒரு பெண்மணி வந்து நின்றாள். நாற்பது வயதிற்குள் தான் இருக்கும்.

வரிசையில் நின்றவள் , சாமியை தரிசனம் செய்ய நேரம் ஆகும் என்பதால் உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று திட்டம் போட்டாள்.

“என்ன இன்னைக்கு இவ்வளோ கூட்டம்? சாமி பார்க்க நேரம் ஆகும் போல ? எனக்கு வேற வேலை இருக்கு ? “ என்று புலம்பிய படி வந்து , பெரியவர் சுந்தரத்திற்கு பின் சென்று நின்றாள்.

கையில் அபிசேகம் செய்ய பால் வாங்கி வந்திருந்தாள்.

வரிசையில் வந்து ஒரு நிமிடம் கூட நிம்மதியாக நிற்கவில்லை. புலம்பிய படியே நின்றாள்.

ஒன்னும் செய்ய முடியாது என்று நினைத்து , “சரி தள்ளுங்க , நான் உள்ளே இருக்கிற மத்த சாமிய கும்பிட்டு வாறேன்னு” , பெரியவரை இடித்து உள்ளே நுழைந்தாள்.

அதற்க்கு பெரியவர் , “ அட இரும்மா. எல்லாரும் சாமி கும்பிட தான வந்திருக்கோம் , கொஞ்ச நேரம் காத்திருந்து தான் சாமிய தரிசனம் பண்ணனும் , இதுலயுமா அவசர பட்றது “ என்று சுந்தரம் கூறினார்.

அதற்க்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளித்து விட்டு , வரிசையில் நின்ற அனைவரையும் இடித்து விட்டு , அவர்களின் வாயில் விழுந்து உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவள் , மற்ற சாமியை பார்ப்பது போல் சென்று விட்டு , சட்டென்று அந்த சாமியின் முன் வந்து நின்றாள்.

அவள் வந்து நின்றதால் , கோவிலில் வரிசையில் நின்றவர்கள் மத்தியில் சலசலப்பு.

இருப்பினும் எதனையும் காதில் வாங்காமல் , சாமிக்கு அபிசேகம் செய்ய பாலை கொடுக்க , அதனை கோவில் பூசாரி வாங்கும் போது , கை நழுவி கீழே விழுந்து பால் அனைத்தும் வீணாகி போனது.

உடனே அவளுக்கு , வரிசையில் நின்று இருந்தவர்களில் தன்னை திட்டியவர்களை நினைத்து , கடும் கோவம் வந்தது.

“எப்படி , எனக்கு நல்லது நடக்கும். ஒரு ஆள் முன்னேறி வந்திர கூடாது. அத்தனை பேருக்கும் வயித்தெரிச்சல். விளங்கதவர்கள் வாயில விழுந்து , சாமிக்கு அபிசேகம் பண்ண வேண்டிய பால் கீழே சிந்தி வீணா போச்சு. சாமிக்கு தெரியும் , எல்லாத்தையும் பார்த்துட்டு தான இருக்கிறார் “ என்று அவளின் பேச்சு , சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு எரிச்சல் உண்டாக்கியது.

உடனே பெரியவர் சுந்தரம் “ ஏம்மா , வரிசையில நின்னு முன்னேறி போன மாதிரி பேசுற. பண்ற தப்பு எல்லாம் நீ பண்ணிட்டு , வரிசையில் ஒழுங்கா நிக்கிற எங்களை திட்டுற. கோவிலுக்கு வர்ற எல்லாரும் மன நிம்மதி தேடி வாராங்க. அங்கேயும் இப்படி வந்து பண்ணா , எப்படி ? எங்க தான் போறது? உன் ஒருத்தியால எல்லார்க்கும் சாமிய பார்க்கிற நேரத்தில் தேவை இல்லா தலைவலி. மன நிம்மதிய கெடுத்து விட்டுட்ட“ , என்று கூறினார்.

இருப்பினும் அந்த பெண்மணி அவரின் பேச்சை காதில் வாங்காமல் , சாமி தரிசனம் செய்வதில் மும்முரம் காட்ட துவங்கினாள்.

உடன் வரிசையில் நின்றவர்களும் தலையில் அடித்த படி , கடவுளே எங்களை காப்பது என்று சலிப்பாய் சாமி தரிசனம் செய்யும் அளவிற்கு அந்த பெண்மணியின் செய்கை இருந்தது.

 # உண்மையாகவே இது போன்ற சம்பவங்கள் நமது வாழ்விலும் நடந்திருக்கும்.

# பொது இடங்களில் இது போன்று மற்றவர்களுக்கு தொந்தரவு / இடைஞ்சல் தருமாறு நடந்து கொள்ள வேண்டாம்.

# கோவிலுக்கு பெரும்பாலனோர் மன நிம்மதி தேடி தான் வருவார்கள் , அங்கே அதனை கெடுத்து விடும் படி நடந்து கொள்ள வேண்டாம்.

 முற்றும்

கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்

                                                                                                                   சிறுகதை : மணிராம் கார்த்திக்  

காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

இந்த கதை என் சொந்த கற்பனை கதை , என்பதை உறுதி அளிக்கிறேன்




Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories





கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."