பைனான்ஸ் கம்பெனி
![]() |
| கம்பெனி-company |
பைனான்ஸ் கம்பெனி
எல்லா டெபாசிட்காரர்களும் அந்த பைனான்ஸ் கம்பெனி முன்னாடி நின்று சத்தம் போடுவதும், கல்லைத்தூக்கி எறிவதுமாய் கோபத்தில் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
கம்பெனியின் முதலாளி குணாளனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மானேஜர் அவ்வளவு பணத்தையும் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டிவிட்டான். பணத்தை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்று புரியவில்லை.
அக்கவுண்டன்ட் அருணாசலத்திடம் “எவ்வளவு பணம் இருக்கும் கேஸ் பாக்ஸில்'” என்று கேட்டார்.
“ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் சார்” என்றார். அருணாசலம்.
“வெளியே எத்தனை பேர் பணம் கட்டியிருக்கும் ரசீதோடு நிற்பார்கள்”.
“நாலைந்து பேர் ரசீதோடு நிற்பார்கள் மற்றவர்களிடம் ரசீது இல்லை” என்றார் அருணாசலம்.
“ஒன்று செய்யுங்கள். ரசீது உள்ளவர்களை உள்ளே வரச் சொல்கிறேன். பணம் கொடுங்கள்”.
“மற்றவர்களுக்கு…”
“நாளை வரச் சொல்லலாம். நான் இப்போது வெளியே போக வேண்டுமானால் வேறு வழியில்லை. நாளை கம்பெனியை லாக்கவுட் செய்து விடலாம். பேசாமல் போலீஸ் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துவிடலாம். நான் வெளியே போவதற்கு வழி செய்யுங்கள்” என்றார்.
“சார் மற்றவர்களை ஏமாற்றப் போகிறீர்களா?” என்று கேட்டார் அருணாச்சலம்.
“கண்டிப்பாக ஏமாற்றக் கூடாது. இந்த ஆபீஸ், நான் சம்பாதித்த எல்லாம் மக்கள் பணம்…ஏதாவது ஒரு நிலத்தை விற்று உடனடியாக பணம் கேட்பவர்களுக்கு கொடுத்து விடலாம்”
“அப்புறம்?”
“நாம் ஆரம்பிக்கலாம்… தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மக்கள் நம்பிக்கையை இழக்காத வரைக்கும் நாம் ஒழுங்காக வியாபாரம் செய்யலாம்” என்றார் குணாளன். மனதில் தெளிவுடன் முகமலர்ச்சியோடு திரும்பி எழுந்து வந்த பீனிக்ஸ் பறவையின் புத்துணர்வோடு.

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."