கபாடி போட்டி
![]() |
கபாடி போட்டி-kabbadi |
கபாடி போட்டி
மாப்ள இந்த வாட்டி நடக்க போற கபாடி போட்டிக்கு தமிழ்நாட்டுல பல எடத்துலெர்ந்து நிறைய டீம்லாம் கலந்துக்க போவுதாம் தெரியுமா என்றான் மாதவன.
அப்டியா எனக்கு தெரியாதே ஊர் பஞ்சாயாத்துல பேசிகிட்டாங்க அதான் தெரியும் ஆன இவ்வளவு பெரிய பெரிய ஊர்லர்ந்து நிறைய டீம்கள் வரும்முன்னு தெரியாதுடா.
பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு போய் விசாரித்ததில் உண்மை என தெரியவந்தது.
எங்கள் ஊரில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக கபாடி போட்டிகள் நடத்தி வருகிறோம். நல்ல முறையில் பல பெரியவர்கள் , சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், வசதிபடைத்த விவசாயிகளின் நிதி உதவியோடு நடத்தி வருகிறோம். இருபத்தி இரண்டாண்டுகளில் ஆறுமுறை மட்டுமே பரிசு பெறாமல் இருந்திருக்கிறோம் திறமையானவர்களை வருடம் முழுவதும் தயார்படுத்துவதும் எங்களுர்காரர்கள் முதன்மையாக இருக்கிறார்கள்.முதல் முறையாக எங்களுரை பற்றியும் எங்களின் ஆடும் திறமை பற்றியும் அறிந்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் திறமையான பெயர் போன டீம்கள் கலந்து கொள்வதாக கேள்விப்படுகிறோம்.
மாதவனும் எங்களூர் டீமில் விளையாட்டு வீரன். கடந்த ஐந்தாண்டுகளாக திறமையாக விளையாடி பல பரிசுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறான்.
ஊர்முழுவதும் ஒரு வாரகாலமாக கபாடிப் போட்டி பற்றிய பேச்சாகவே இருந்தது. இந்த முறை பரிசு கிடைக்குமா? இதற்கு முன்பெல்லாம் அருகில் இருக்கும் ஊர்களிலிருந்து கலந்து கொண்டதால் ஓரளவு கணிக்க முடிந்தது. இப்போது தமிழகத்தின் பல தலைசிறந்த டீம்கள்
கலந்து கொள்வதால் ஊர்காரர்கள் சற்றே கலக்கத்தோடு இருந்தது உண்மை.
இருந்த ஒரே டீ கடையிலும் , பஞ்சாயத்து அலுவலகத்திலும் , ஆற்றுகிளை வாய்கால் கரைகளிலும் இதே பேச்சாக இருந்தது. பெண்களும் ஆண்களும் நாள் முழுவதும் இது பற்றியே எண்ணி பேசிக் கொண்டிருந்தனர்.
ஊருக்கு கிழக்கே இருக்கும் வாய்கால் கரையிலிருந்து நூறு மீட்டர் முன்னாலும் பெரிய ஆலமரத்திலிருந்து கொஞ்சம் தூரத்திலும் கபாடி போட்டி நடக்குமிடம் தேர்வு செய்யப்பட்டு . சவுக்கு கழிகளால் நாற்புறமும் கழுத்தளவு உயரத்தில் வேலி அமைக்கப்பட்டது இடையே கழிகள் கொடுத்து தென்னை மட்டை நார்களில் செய்யப்பட கயிறுகளால் வலுவாக கட்டமைக்கப்பட்டிருந்தது.. மைதானத்தின் மையத்தின் இருபுற எல்லைகளில் ஒன்னரை ஆள் உயரத்திற்கு கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அடிபடாமல் இருக்க ஆற்று மணல் ஒரளவு பரப்பட்டிருந்தது. அந்த மைதானத்தில் மாதவனும் எங்களூர் விளையாட்டு வீரர்களும் நண்பர்களும் தொடர்ந்து பயிற்சி எடுத்து வந்தனர்.
போட்டியின் நாடக்கவிருந்த நாள் நெருங்கியது . பல அரசியல் தலைவர்களும் , சட்டமன்ற உறுப்பினரும், எங்கள் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் பல பரிசு தொகைகளை அறிவித்த பெரிய பதாகைகளும் ஊர்முழுக்கவும் மைதானத்தின் இருபுறமும் அமைத்திருந்தனர்.
பல ஊர்களிலிருந்து வந்திருந்த கபாடி குழுக்களுக்கும் , போட்டிகளை கண்டு களிக்கவும் உற்சாக படுத்தவும் பார்வையாளராக கலந்து கொள்ளுபவர்களுக்கும் தனித்தனியாக மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
வெயிலை பெறுப்படுத்தாமல் காலை முதலே பல ஊர்களிலிருந்தும் பார்வையாளர்கள் வரத்தொடங்கி ஒன்பது மணிக்குள் அதிகமான அளவில் குழுமிவிட்டனர் .
ஒன்போதரைக்கு சட்டமன்ற உறுப்பினரால் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மைதானத்திற்கு வெளியே வாய்க்கால் கரையோரம் வெளியூர் குழுக்கள் தங்களை தயார்படுத்த உடலை தளர்த்தியும் அரை ஓட்டம் , கால் ஓட்டம், மெதுவாக குதித்தலும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பல குழுக்களுக்கு கிடைத்துக் கொண்டு இருந்தன . எங்களுர் குழு ஒரளவு முன்னேறி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் . மதியம் மணி ஒன்னரை ஆகிவிட்டதால் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
போட்டியாளர்களுக்கு ஆலமரத்தடியில் பாத்திரக் கடையில் வாடைக்கு எடுக்கப்பட்ட நாற்காலி மேஜையில் பாக்கு மட்டையில் தயார் செய்த தட்டுகளில் சாம்பார் சாதமும், தயிர்சாதமும் வழங்கப்பட்டது.
மைதானத்திற்கு வெளியே வாய்காலை ஒட்டி சற்று தள்ளி சின்ன யானை என்றழைக்கப்படும் டாடா வேனில் மூன்று பெரிய அகலமான அலுமினிய பாத்திரங்களில் சாம்பார் சாதம் தயிர்சாதம் . எலுமிச்சை சாதம் கொண்டு வரப்பட்டது.
ஒலி பெருக்கியில் பார்வையாளர்களுக்கு அறிவிப்பும் தந்தனர்.
பார்வையாளர்கள் பாக்கு தட்டை பெற்றுக்கொண்டு வரிசையாக வேனின் அருகே சென்றால் உணவு வழங்கப்படும் என பல முறை அறிவிப்பு தரப்பட்டது.
தட்டை வாங்கியவர்கள் வரிசையில் செல்லாமல் ஒரேயடியாக வேனை சூழ்ந்து கொண்டு தட்டை நீட்டிக் கொண்டபடி கூச்சலிட்டு உணவை கேட்டவன்னமிருந்தனர்
மைக்கில் மன்றாடி அறிவித்தாலும் நிலமை கட்டுக்குள் வரவில்லை.
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு வாங்குவதற்கு தட்டை நீட்டியதால் உணவு வழங்குபவர்களுக் கோபமும் சலிப்பும் ஏற்பட்டது. உணவு வழங்கும்படி கூச்சல் அதிகமானதால் பதற்றப்பட்ட உணவு வழங்குபவர்கள் தட்டுகளில் உணவை இட ஆரம்பித்தனர். மேலும்
பார்வையாளர்கள் முன்டியடித்ததினால் உணவு வாங்கியவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தீடிரென சலசலப்பும் கூச்சலும் அதிகமாகியது உணவு சூடாக இருந்தால் வாங்கியவர்கள் தட்டை எடுத்துக் கொண்டு வெளியேற முயன்ற போது தலைக்கு மேல் தட்டை நீட்டியவர்களுக்கு உணவு போடப்பட்ட போது தட்டை சரியாக பிடிக்க முடியாததால் ஒரு சிலர் மீது தட்டு முறிந்து வளைந்து சூடான உணவு பட்டதால் கோபத்தில் வார்த்தைகள் வெடித்து கிளம்ப ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஒன்று சேர ஆரம்பித்து சண்டை மூண்டது வாய்வார்த்தையில் தொடங்கியது கைகலப்பிலும், எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட கம்பு, அறிவாள்களாலும் அடித்துக் கொண்டும் வெட்டிக்கொண்டும் சண்டை முற்றி கலவரமானது மைதானத்தை சுற்றி இருந்த சவுக்கு வேலியும் , கண்காணிப்பு மேடைகளும் அடித்து நொருக்கப்பட்டு சின்னாபின்னமாகியது.
அரை மணியில் ஊர்முழுவதும் கலவரம் பரவி இரண்டு பிரிவாக பிரிந்து சண்டை பெரிதாகி கலவரமாகி ரத்த ஆறு ஓடியது
ஒரு மணி நேரத்தில் ஆயுதபடை வரவழைக்கபட்டு கலவரம் அடக்கப்பட்டது . ஆம்புலன்ஸ்கள் அலரியபடியே அடிக்கடி வந்து போய் கொண்டிருந்தன.
மொத்தம் ஐம்பத்தி மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்டனர் முப்பத்திரண்டுபேர் காயங்களாலும் பதினாறு பேர் பலத்த காயங்களாலும் ஐந்து பேர் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் மிதிப்பட்டும் வெட்டுப்பட்டும் அறுவர் இறந்தனர்.
கபாடி போட்டிக்கு வந்திருந்த வெளியூர் விளையாட்டு வீரர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அனுப்பிவைத்தோம்.
நான் மாதவனை தேடிய போது காயம் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களில் அவனும் ஒருவன். மாதவனின் வலது கால் முட்டிக்குக் கீழே துண்டிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை