sirukathaigal

பிஞ்சில பழுத்தது

பிஞ்சில பழுத்தது-school liffe

பிஞ்சில பழுத்தது

காலை முதல் வகுப்பைத் தொடங்க வகுப்பாசிரியர் ஒன்பதாம் வகுப்பு ‘ பி ‘  பிரிவில் நுழைந்தார்.


உட்கார்ந்தார்.
கோம். நீ என்னடான்னா பிஞ்சில பழுத்துப்போய் இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கே.  உங்கப்பா அம்மா எப்படிடா பர்மிஷன் கொடுத்தாங்க…”

வருகைப் பதிவில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்துவிட்டு நிமிர்ந்து

வெகு அருகில் முதல் பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த மாணவன் ரவி மீது தற்செயலாக  ஆசிரியரின்  பார்வை  சென்றது. ரவியின் கண்கள் கோவைப் பழமாக சிவந்திருந்தது ! மிகவும் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்க முடியாமல் அடிக்கடி தன் இரு கைகளையும் வாயில் வைத்துப் பொத்திக் கொண்டிருந்தான்.

“டேய் ரவி ! உன் கண் ஏண்டா சிவந்திருக்கு ? அதோட கொட்டாவி வேற விடப் பார்க்கறே? இது வகுப்பறையா, இல்ல உன் வீடுன்னு நினைச்சயா?” 

மெல்ல எழுந்து நின்றவன், “சார்…ராத்திரியெல்லாம் தூக்கமில்ல சார்!”

“ஏண்டா தூக்கமில்ல?”

ஆசிரியரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தான் ரவி.

“டேய் உன்கிட்டேதான் கேட்கிறேன், பதில் சொல்லு!” ஆசிரியர் மிரட்டினார்.

சட்டென ரவி பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் ஜக்கு எழுந்து நின்று  சொன்னான்.  “சார் ரவி தண்ணி அடிச்சிருக்கான் சார்!”

திடுக்கிட்ட ஆசிரியர், “என்னது தண்ணியடிச்சானா…இந்த வயசில இது கேட்குதா? அது  சரி..ரவியோட பெற்றோர் பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தாங்க?”  கோபத்துடன் கேட்டார் .

“அவங்கதான் சார் தண்ணியடிக்கச் சொன்னாங்க!”

ரவி தூக்கக் கலக்கத்துடன் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கடுங்கோபத்துடன் எழுந்த ஆசிரியர் ரவி எதிரில் வந்து நின்றார்.

“ஏண்டா இந்தியாவின் எதிர்காலமே மாணவர்கள் கையிலேன்னு பேசிக்கிட்டிருக்

நடக்கும் களேபரத்தில் ரவி முழுவதுமாக விழித்துக்கொண்டான்.  விஷயம் ஏடா கூடமாக போவது உறைத்தது!  சுதாரித்துக் கொண்டான்.

“சார்….குழாயில தண்ணியடிக்கிறது தவறா சார்?”

“குழாயிலேயா… என்னடா  சொல்றே?”

“ஆமாம் சார்! நேத்து ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல எங்கள் தெரு குழாயில தண்ணி வந்தது சார்..எங்க வீட்டுக்கு மட்டுமில்லை சார். பக்கத்து வீட்டில இருக்கும் வயதான அம்மாவுக்கும்  நான்தான் சார் தண்ணியடிச்சுக் கொடுத்தேன். படுக்கப் போகும்போது மணி ஒண்ணாயிடிச்சு சார் …” நீண்ட கொட்டாவியுடன் பேச்சை முடித்தான் ரவி.

இப்போது ஆசிரியர் ஜக்குவின் பக்கம் திரும்பினார். “ஏண்டா…ரவி குழாய்த் தண்ணி அடிச்சதுக்கு இந்த  பில்டப்பா!” எனக் கூறி ஜக்குவின் தலையில் நறுக்கென்று குட்ட , அப்படியே கிர் கிர்ரென்றிருக்க இப்போது தான் தண்ணியடித்ததுபோல் உணர்ந்தான் ஜக்கு.


Sirukathai | sirukathaigal | Tamil kathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

பிஞ்சில பழுத்தது பிஞ்சில பழுத்தது Reviewed by Sirukathai on பிப்ரவரி 02, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."