கருப்பு கலரு
![]() |
கருப்பு கலரு -black colour |
கருப்பு கலரு
சர்னு வட்டமடித்து கேட்டைத் தாண்டி, அந்த பங்களாவின் போர்டிக்கோ முன் நின்றன போலீஸ் வேன்கள்!
கதர் வேஷ்டி கலையாத மடிப்புடன் சந்தன செண்ட் மணக்க எதோ தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு வந்தார் அந்த அரசியல் பிரமுகர்.
வந்தவர்களை இருகை கூப்பி வணங்கி, ‘ என்ன விஷயம் இப்படிக் கூட்டமாய் வந்திருக்கீங்க..?!’ என்றார் கூலாக.
காவல் துறையின் மூத்த அதிகாரி, ‘ நீங்க உங்களை ரொம்ப அறிவாளியாக் காட்டிக்கறது தப்பில்லை!… மக்களை ஏமாத்தணும்னா அப்படித்தான் வேஷம் போடணும்…! ஆனால், நம்ம காவல் துறையைத் தப்பாக் கணிக்கறது கொஞ்சம்கூட நியாயம் இல்லீங்களே?!’ என்றார் அவரைப் போலவே அப்பாவித்தனமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு..!
‘நீங்க என்ன சொல்றீங்க? புரியலையே?! என்றார் அரசியல் பிரமுகர்.
‘ஒண்ணுமில்லை… சமீக காலமா உங்க சமிக்கையான, ‘கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு!’ பாட்டுத்தான் உங்களைக் கண்காணிக்க எங்களுக்கு உத்வேகம் தந்தது!’ என்றார் அதிகாரி.
‘என்ன சொல்றீங்க.. அந்தப் பாட்டு எனக்குப் பிடிக்கும்!’ அதான் அதைக் காலர் டியூனா வச்சிருக்கேன்> அதிலென்ன தப்பு?!
‘நீங்க உங்க கருப்புப் பணம் முழுசையும் வெள்ளையாக்கீட்டீங்களா?’ என்று கேட்டார் காவல் அதிகாரி.
‘எ..? என்…? என்ன.?. என்ன சொல்றீங்க???’ படபடத்தார் அரசியல் பிரமுகர்.
‘சும்மா நடிக்காதீங்க தலைவரே?!
‘நடிக்கறனா?! நானா?!’ என்றார் அவர்.
‘கில்லாடித்தனமா உங்க மாவட்டத்துல உங்க தொகுதி எடங்கள்ல எல்லாம் தவறிவிட்ட பணப்பையை யாரோ கண்டெடுத்ததாகவும், அதைப் போலீசில் ஒப்படைத்ததாகவும் நீங்களே ஆளை வைத்து ஏற்பாடு செய்து, அதை உங்க ஆள் மூலமாகவே திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தை உங்க கணக்கில் வரவு வைத்துக் கொண்டீங்க!’
‘நீங்க என்ன சொல்றீங்க?’ என்றார் அதிர்ந்து போய்..!
‘இதுக்கே மலைச்சுட்டா எப்படி?! அதூம் கண்டெடுத்தவர்கள் எல்லாம் பேல்பூரி விற்பவர்கள். அவர்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் நோட்டாக வைத்துக் கொண்டு, அவர்களுக்கு வியாபாரத்தில் குவியும் நூறு ரூபாய் இருநூறு ரூபாய் மற்றும் சில்லரை நோட்டுகளை அடுக்கி பையில் வைத்து நீங்களே அவர்கள் மூலம் தவறவிட்டுவிட்டு ஆளை வைத்து எடுத்து சந்தேகம் வராமல் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து திரும்ப வாங்கிக் கொண்டு, கருப்பை எல்லாம் வெள்ளையாக்கி வந்தீர்கள்.
எல்லா ஊர் போலீஸ் ஸ்டேஷன்லயும் பணம் கிடைத்ததாக கொண்டுவந்து கொடுத்தவர்கள் லிஷ்டை ஆராய்ந்த போதுதான் சந்தேகம் வலுத்தது. அவர்கள் எல்லாருமே பேல்பூரி விற்பவர்கள். மேலும், பணம் கிடைத்ததாய் போலீசில் அவர்கள் தங்களுக்கான வாட்ஸாப் குழுவில் பணபரிவர்த்தனைத் தகவல்களை பரிமாறுவது கண்டு பிடிக்கப்பட்டது! காரணம் அதன் அட்மினானவர் உங்கள் பிஏ எனக் கண்டறிந்தபோதுதான் உங்கள் கருப்புப் பணத் தில்லுமுல்லு குட்டு வெளிப்பட்டது. இன்னமும் நிறைய பேச வேண்டி இருக்கு! மிச்சத்தை ஸ்டேஷன்ல பேசிக்கலாம்!! என்ன போலாமா?!’ என்றதும்…
கைகளை நீட்டி ஜீப்பை நோக்கி தலைகவிழ்ந்து நடந்தார்.
கருத்துகள் இல்லை