'கான்டாக்ட் லென்ஸ்'
'கான்டாக்ட் லென்ஸ்'
தோழி ஒருத்தி ,மூக்கு கண்ணாடி அணிவதற்கு பதிலாக, 'கான்டாக்ட் லென்சை' அணிந்திருந்தாள்.
ஒரு நாள் காலை,வாணலியில் தாளிக்கும்போது,கடுகு தெறித்து,வலது கண்ணியில் பொருத்தியிருந்த, 'கான்டாக்ட் லென்சீல்' பட்டுள்ளது.சூடான எண்ணெயிலிருந்த,கடுகு, லென்சீல் ஒட்டி,லென்ஸ் சுருங்கி, கண்ணிலேயே ஒட்டிக்கொண்டது.
வலி தாங்காமல் துடித்த தோழி, கண்ணிலிருந்து, 'கான்டாக்ட் லென்சை' கழற்ற முயற்சித்தும் முடியவில்லை. பயந்து, போனில் அழைத்து, விஷயத்தை கூறினாள்.
உடனே, அவளை அழைத்து தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றேன். பல ஆயிரம் செலவு செய்தபின், அவள் கண்ணில் ஒட்டியிருந்த, 'லென்ஸ்' அகற்றப்பட்டது.
அதன்பின், சமையல் செய்யும்போது, மூக்கு கண்ணாடி பயன்படுத்தி வருகிறாள், என் தோழி.
'கான்டாக்ட் லென்ஸ்ட் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த செய்தி ஒரு எச்சரிக்கையாகவும், பாடமாகவும் இருக்கும்.
என். லதா,

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."