sirukathaigal

மாயாஜால மலை

மாயாஜால மலை

(சமரபாகுவையும் அவனது ஆளையும் கரடித்தோலர்கள் கூட்டம் தம் கோட்டைக்குக் கொண்டு சென்றார்கள். ஜீவதத்தனும் கஜவர்மனும் அவர்களது இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அங்கு சென்றார்கள். அங்கு அவர்கள் கரடியப்பரின் ஆட்களிடம் அகப்பட்டு ஓநாய்ப்பாறைக்கு ஒரு சுரங்கப்பாதை வழியாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.) 

கரடித்தோலர்கள் இருட்டில் ஜீவதத்தனையும் நடத்திக் கூட்டிப் போய் ஓரிடத்தில் நின்றார்கள். அப்போது முன்னால் நின்ற கரடித்தோலன் பின்னால் நின்றவனிடம் "அண்ணே! ஓநாய்ப்பாறை என்றால் ஏதோ வேடிக்கை நடக்கும் இடம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓநாய்கள் கூவுவதைக் கேட்டும் இவர்கள் பயப்படாமல் இருப்பது ஆச்சரியமாக இல்லையா?" என்று கேட்டான். 

மற்றவனும் அது என்ன என்பதை இவர்களுக்குக் காட்டத் தான் போகிறோமே" எனக் கூறி அங்கிருந்த கொக்கியைப் பிடித்து பலமாக இழுத்தான். அப்போது ஒரு சிறுகதவு திறந்து உள்ளே நிலாவெளிச்சம் விழுந்துள்ளதைக் காட்டியது. அப்போது ஜீவதத்தன் "கஜா! இது தான் இவர்கள் மறைந்து வாழும் இடம் போலத் தெரிகிறது" என்றான். 

அதைக் கேட்ட ஒருகரடித்தோலன் பலமாகச் சிரித்து 'இந்த இடத்தில் நாங்கள் மட்டும் வாழவில்லை. இங்கு பல ஓநாய்கள் உள்ளன. அவற்றிடமிருந்து நீங்கள் தப்பினாலே எங்கள் குரு கரடியப்பரை காண முடியும்" என்றான். ஜீவதத் தனும் "ஓகோ! அப்படியா?” என்ற வாறே திறந்த கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தான். உள்ளே சற்றுத் தொலைவில் பத்து பனிரெண்டு அடி உயரத்தில் ஒரு பாறை இருந்தது. அதன் மீது இருவர் நின்று தம் ஈட்டி களால் தம் மீது பாய வரும் ஓநாயை பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். வேறு சில ஓநாய்கள் அந்தப் பாறையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.


அப்போது ஜீவதத்தன் "பாறை மீது இருப்பவர்கள் சமரபாகுவும் அவனது ஆளுமாக இருக்கலாமோ?" என்று கஜவர்மனிடம் கேட்டான். அதற்கு பதில் கூறுவது போல கரடித்தோலன் ஒருவன் 'அவன் சமரபாகுவோ, வெல்லப்பாகுவோ? சற்று நேரத்தில் ஓநாய்களுக்கு அந்த இருவரும் இரையாகப் போகி றார்கள். அவர்களைப் போல நீங்கள் இருவரும் தான் மடியப் போகிறீர்கள். ஒரு வேளை நீங்கள் விருகேஸ்வரி தேவியின் கருணையால் உயிர் தப்பினால் எம் கரடியப்பரின் சீடர்களாகி அவருக்குப் பணிபுரியும் பாக்கியத்தை அடையவாம்" என்றான். 

ஜீவதத்தனோ “ஏய்! சும்மா பிதற்றாதே. நாங்களும் அந்தப்பாறைக்குத் தானே போக வேண்டும்? வா, போகலாம்” என்றான். அது கேட்டுக் கரடித்தோலன் ''அடேயப்பா! அவ்வளவு துணிச்சலா? கொஞ்சமும் பயமே இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.பிறகு அவன் "சரி. வாருங்கள். இதோ தெரியும் சுரங்கப் பாதை வழியாக அங்கே செல்வோம்'' என்றான். 

அவர்களும் அப்பாதை வழியே சற்று தூரம் சென்று ஒரு சதுரமான கல்லை அடைந்தார்கள். கரடித் தோலர்கள் அதில் பிணைத்திருந்த கம்பியைப் பிடித்து பலமாக ஆட்டித் தூக்கினார்கள். அது அகன்றதும் சமர பாகுவையும் அவனது ஆளையும் ஜீவதத்தனும் கஜவர்மனால் நன்கு பார்க்க முடிந்தது.

பலகை நகர்ந்ததுமே சமரபாகு 'குண்டூ! பலகை திறக்கப்பட்டு விட்டது. ஓநாய்கள் பாய்ந்து வரப் போகின்றன. ஜாக்கிரதை” என்று எச்சரித்தான். அப்போது ஜீவதத்தன் “சமரபாகு! வருவது நாங்களே. உன் நண்பர்கள்" என்று உரத்த குரலில் கூறினான். அவர்களைப் பார்த்த சமரபாகு ஆச்சரியப்பட்டான். அப்போது கரடித் தோலன் "நீங்களெல்லாம் நண்பர்களாக இருந்தால் மட்டும் என்ன? எல்லோரும் கூண்டோடு ஒநாய்களுக்குத் தானே இரையாகப் போகிறீர்கள்" என்று கூறி ஏளனமாகச் சிரித்தான். 

பிறகு அந்தக் கல்லை முன் போல வைத்து வழியை அடைத்து விட்டு அவ்விருவரையும் சமர பாகுவின் அருகே கொண்டு போய் நிறுத்தினான். ஜீவதத்தனும் "சொர்ணம் உங்களைப் பற்றிக் கூறினான். நாம் யாவரும் பத்திரமாகத் திரும்பிப் போகப் போகிறோம். இதை நீ முழுமையாக நம்பலாம்" என்றான்.

இச்சமயத்தில் ஒரு ஓநாய் பாறை மீது ஏற முயன்றது. கஜவர்மன் தன் வாளால் அதன் தலையைத்தூக்கி அதைப் பிடித்துத் தூக்கிப் பாறை மீது போட்டான். ஜீவதத்தன் கஜனைப் பாராட்டி விட்டு சமரபாகுவிடம் "இங்குள்ள ஓநாய்களுக்கு எப்போது உணவைப் போடுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டான்.

சமரபாகுவும் 'சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் இவற்றிற்கு ஏதாவது ஒரு மிருகத்தின் மாமிசத்தைப் போடுவார்கள்... அதோ தெரியும் கதவைத் திறந்து தான் அவ்வாறு போடுவார்கள்" என்று கூறி அங்கிருந்த ஒரு கதவைச் சுட்டிக் காட்டினான். சற்று நேரத்திற்குப் பின் சூரி யோதயமும் ஆனது.

அப்போது ஓநாய்கள் அக்கத வருகே வந்து கத்தலாயின. ஜீவதத்தன் கஜவர்மனுக்கு அக்கதவைச் சுட்டிக் காட்டி “கரடித் தோலர்கள் இன்னமும் சற்று நேரத்தில் ஓநாய்களுக்கு மாமிசத்தைப் போடப் போகிறார்கள். நீ வில்லை எடுத்து வைத்துக் கொண்டு அம்புகளுடன் தயாராக இரு" என்று கூறினான்.

கஜவர்மனும் வில், அம்புகளுடன் தயாராக நின்றான். சற்று நேரத்தில் அக் கதவு திறக்கப்பட்டது. கரடித் தோலர்கள் ஒரு பெரிய தட்டில் மாமிசத்தை எடுத்துக் கொண்டு வந்தனர். அப்போது கஜவர்மன் எய்த அம்பு மாமிசத்தை எடுத்துக் கொண்டு வந்த ஒருவனின் மார்பைத் துளைத்துக் கொண்டு சென்றது. அவன் ஆவென அலறித்துடி துடித்துக் கீழே விழுந்து இறந்து போனான்.

அப்போது அவன் பிடித்து வந்த மாமிசத்தட்டு தரை மீது விழுந்தது. அப்போது பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. தியானத்தில் இருந்த கரடியப்பர் கண் விழித்து எழுந்து பார்த்தார். அப்போது ஒரு கரடித் தோலன் ஓடி வந்து 'குருவே! ஓநாய்ப் பாறை மீதிருந்த ஒருவன் நம் ஆள் ஒருவனை அம்பால் அடித்துக் கொன்று விட்டான்” எனத் தெரிவித்தான்.

அதைக் கேட்டகரடியப்பர் கடும் கோபம் கொண்டு “விருகேஸ்வரி தேவியின் பக்தனான எனக்கா யாரோ சவால் விடுகிறான்! இப்போதே அவர்களை ஒழித்து விடுகிறேன்" எனக் கூறிக் கொண்டு கையில் சூலத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். அவர் ஓநாய்ப் பாறையை அடைந்து அதன் மீது நின்று கொண்டிருந்த நால்வரையும் பார்த்து "அடே பாவிகளே! விருகேஸ்வரியின் பக்தன் ஒருவனை அம்பு எய்து கொன்று விட்டீர்களா? இப்போது என் சூலத்தால் குத்தி உங்களை எல்லாம் ஓநாய்களுக்கு இரையாக்குகிறேன் பார்" என்று உறுமினான். 

அது கேட்டு ஜீவதத்தன் பலமாகச் சிரித்து 'கரடியப்பா! நீ கரடியின் பெயர்வைத்துக் கொண்டு ஏன் ஓநாய்களை உதவிக்கு வைத்துக் கொண்டிருக்கிறாய்? இதோ நானே கீழே இறங்கி வந்து உன்னைத் தாக்குகிறேன்" என்றான்.சமரபாகுவோ ''ஐயோ! கீழே இறங்க வேண்டாம். ஓநாய்கள் உங்களைக் குதறிவிடும். மேலும் இந்தக் கரடியப்பன் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்தவன். எனவே அவனோடு மோத வேண்டாம்'' என்று எச்சரித்தான். கஜவர்மனோ ''என் வாளிலும் ஜீவதத்தனின் மந்திரத் தடியிலும் நீ கூறும் மந்திர சக்தி அதிகமாக உள்ளது. அதனால் இந்தக் கரடியப்பனாலோ அல்லது ஓநாய் களாலோ எதுவும் செய்ய முடியாது" என்றான்.

அப்போது ஜீவதத்தன்கரடியப்பர் நிற்கும் இடத்தை கஜவர்மனுக்கும் மற்ற இருவர்களுக்கும் காட்டி ''நாம் இங்கிருந்து வெளியேறுவதற்கு வழி கரடியப்பர் நிற்கும் இடத்தில் தான் உள்ளது. அதனால் ஓநாய்களை வேட்டையாடி, கொன்று கரடியப்பரின் கோட்டையைத் தாக்கி சின்னாபின்னப் படுத்துவோம்" என்றான். 

கஜவர்மனும் "நான் கொன்ற ஓநாயைத் தூக்கிக் கொண்டு வருகிறேன். அதைத் தின்ன ஓநாய்கள் வரும். அப்போது என் வாளால் அவற்றை வெட்டி எறிகிறேன்" என்றான். ஜீவதத்தனும் "சரி. நாம் இங்கிருந்து கீழே குதிக்கலாம். நீ ஓநாய் களை கவனித்துக் கொள். நான் கரடியப்பனை தாக்குகிறேன்” என்றான். மறு விநாடியே அவர்களிருவரும் பாறை மீதிருந்து கீழே குதித்தனர். ஒருவன் இறந்து போன ஓநாயைச் சுமந்து கொண்டு வந்ததைக்கண்ட ஓநாய்கள் அவனை நோக்கி ஓடி வந்தன. கஜவர்மன் ஓநாயைக் காட்டி அவற்றை அலைய வைத்து தன் வாளால் தாக்கி கொன்றான். ஜீவதத்தனும் சில ஓநாய்களை அடித்துக் கொன்ற வாறே கரடியப்பரை அணுகினான். 

முதலில் ஓநாய்களிடையே ஜீவ தத்தனும் கஜவர்மனும் இருப்பதைக் கண்டு அவர்களை ஓநாய்கள் கொன்று விடும் என்றே கரடியப்பர் எதிர்ப்பார்த்து தியானத்தில் மூழ்கினார். அதைக் கண்ட கஜவர்மன்தன் கையிலிருந்த இறந்து போன ஓநாயை அவர் மீது எறிந்தான். தம் உணவு கரடியப்பரின் பக்கத்தில் விழுந்ததைக் கண்ட ஓநாய்கள் அவரை நோக்கி ஓடின. தன் மீது ஒரு ஓநாய் விழுந்தது கண்டு கரடியப்பர் தட்டுத் தடுமாறி விழுந்தார். அவர் பின்னால் நின்ற சீடர்களோ "ஐயோ ஓநாய்' என்று அலறியவாறே வந்த வழியே ஓட்டம் பிடித்தனர்.

கரடியப்பர் நடுநடுங்கியவாறே பார்த்தார். சற்று தூரத்தில் இறந்து போன ஓநாயின் உடலை சில ஓநாய்கள் கடித்துக் குதறிக் கொண்டி ருந்தன. ஒரு ஓநாய்க்கு அங்கு இடம் கிடைக்காததால் அது கரடியப்பரை நோக்கிப் பாய்ந்தோடி வந்தது. அதைக் கண்ட கரடியப்பர் பயந்து தாம் வந்த சுரங்கப் பாதையில் வேகமாக ஓடி மறைந்தார். 

ஓநாய்களை விரட்டிய பின் ஜீவ தத்தனும் கஜவர்மனும் கரடியப்பர் ஓடிப் போன வழியில் நின்று என்ன நடக்கிறது என்று பார்க்கலானார்கள். ஓநாய்கள் அந்த சுரங்கப்பாதையில் தான் கரடியப்பரைத் துரத்திக் கொண்டு ஓடின. 

அப்போது ஜீவதத்தன் கஜவர் மனிடம் "இனி ஓநாய்கள் கரடியப்பரை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அது பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அவர்கள் இங்கிருந்து காட்டை நோக்கி ஓடி விடுவார்கள். ஆனால் கரடியப்பரை மட்டும் விட்டு வைக்கக் கூடாது" எனக் கூறி ச்மர பாகுவையும் அவனது ஆளையும் பாறையிலிருந்து இறங்கி வருமாறு உரக்கக் கூவினான். 

சமரபாகுவோ “எனக்கு பயமாக இருக்கிறது. அந்தக் கரடியப்பரோ அல்லது ஓநாய்களோ எப்போது வேண்டுமானாலும் வந்து எங்களைத் தாக்கலாமே. ஓநாய்களோ பயங்கர மானவை என்பதை நீங்களே நேரில் பார்த்தீர்கள். கரடியப்பரோ மந்திர சக்தி படைத்தவர். எனவே நாம் இங்கிருந்து தப்பி விடமுடியும் என்பது முடியாது" என்றான்.

அதைக் கேட்டகஜவர்மன் பலமாகச் சிரித்து “சமரபாகு! நீ எங்களைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. ஆனால், உன்தவறில்லை. என் வாளும் ஜீவதத் தனின் மந்திரத்தடியும் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால் கரடியப்பராலும் எதுவும் செய்ய முடியாது. ஓநாய்களையும் நாங்கள் கொன்று விடுவோம்” என்றான். 

ஜீவதத்தனும் 'சமரபாகு! கஜவர்மன் கூறியதைக் கேட்டாயா? அவன் சொன்னதெல்லாம் சரியே. நீ பயப்படாதே. ஓநாய்களும் கரடியப்பரும் வந்து உன்னைத்தாக்காத படி நான் பார்த்துக் கொள்கிறேன். பயப்படாமல் இறங்கி இங்கே வா. உன் ஆளையும் வரச் சொல்" என்றான். 

ஜீவதத்தனும் கஜவர்மனும் கூறியதைக் கேட்டு பயத்தை விட்டு சமர பாகுவும் அவனது ஆளும் பாறையிலிருந்து இறங்கி வந்தார்கள். அவர்கள் அருகே வந்ததும் ஜீவ தத்தன் “சமரபாகு! நாம் இந்த வழியில் போய் கரடியப்பரையும் அவரது ஆட் களையும் எதிர்க்கப் போகிறோம்'' என்றான். சமரபாகுவும் "நாமோ நான்கு பேர்களே தாம். அந்தக் கூட்டத் தவரை வெல்ல முடியுமா?" என்று கேட்டான். 

ஜீவதத்தனும் ''நான் இங்கிருந்து தப்பிப் போக இந்த வழியில் தான் போயாக வேண்டும். அவர்கள் எவ்வளவு பேர்களானாலும் கவலைப்பட வேண்டாம். நம்மிடம் மனஉறுதி உள்ளது. பலம் உள்ளது. மந்திரசக்தியும் உள்ளது. எனவே நீ பயப்படாமல் வா. போவோம்" என்றான். இதற்குள் அங்கே வந்த ஓரிரு ஓநாய்கள் சமர பாகுவை நோக்கி ஓடி வந்தன.

(தொடரும்)



Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."